Saturday , November 2 2024
Breaking News
Home / சினிமா / பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தினமும் பார்க்கிறாரா கமல்?

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தினமும் பார்க்கிறாரா கமல்?

 

 

 

உண்மையில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தினமும் பார்த்துவிட்டுத்தான் பேசுகிறாரா கமல்? இந்த கேள்வி கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். எதுவும் நடக்காதது போலவும், கேட்கக் கேள்விகள் எதுவும் இல்லாதது போலவும் நடந்துகொள்கிறார் கமல். சீசன்1-இல் காயத்ரி, ஜூலி மற்றும் நமீதாவிடம் சரமாரியாகக் கேள்வி கேட்ட கமல் இப்போது எங்கே? ஐஸ்வர்யாவிடம் காட்டிய கோபம் இப்போது எங்கே சென்றுவிட்டது? அவர்களைப் போல இவர்கள் தவறு செய்யவில்லையே ? என்னும் கேள்வியை இங்கே கேட்க முடியாது. சில நேரங்களில் அவர்களே தேவலாம் என்பது போலவே இவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

சீசன்2-இல் மும்தாஜ் தன்னை கன்ஃபெஷன் அறைக்குள் அழைக்கும்வரை மைக்கை போட மாட்டேன் என்று கூறியபோது, “உங்களை அழைக்கும் வரை தங்களது மைக்கை இங்கே வைத்துவிட்டு வெளியே இருங்கள்” என்று கூறிய கமல், சாக்‌ஷி பிரச்னையில் லாஸ்லியா, என்னுடன் யாரும் கதைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு மைக்கை தூக்கிவீசிச் சென்றார். பின்னாடியே அபிராமி அதை எடுத்துக்கொண்டு சென்றார். அதை ஏன் கமல் கேட்கவில்லை?

சீசன்2 -இல் கமல் ஒரு சிறிய இடைவேளை என்று கூறிவிட்டு நகர்ந்ததும் மஹத், ஐஸ்வர்யா மும்தாஜிடம் சண்டை போட்டுவிட்டு ‘ஏ பிக்பாஸ் கதவைத் திற’ என்று கூறியதைக் கவனித்துக் கொண்டிருந்த கமல், திடீரென்று அகம் டிவி வழியாக வந்த கமல் ‘இடைவெளி விட்ட சிறிய நேரத்தில், ஒரு துர்கா பூஜையை நடத்திவிட்டீர்கள். கதவு 10 நிமிடங்கள் வரை திறந்து வைத்திருக்கிறேன் போக வேண்டும் என்று நினைப்பவர்கள் போகலாம்.’ என்று கூறவும் அமைதியடைந்தனர்.

இம்முறை மதுமிதா, முகேன் அபிராமிக்கு பிறந்த குழந்தை ஒரு பாட்டில் என்று ஃபாத்திமா கூறியதை விரும்பாத ஒரு காரணத்தால் அனைத்து பெண்களும் கூடி அவரை சாமியாடிவிட்டனர். இதையும் கமல் ஓரமாக இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார். பின்பு அகம் டிவி வழியாக,’மதுமிதா, கண்களை துடைத்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு நகர்ந்தார்.

சேரன் ‘நான் ஒரு இயக்குநர் என்னை வைத்துப் பாடல் பாடினால் வெளியில் என் இமேஜ் பாதிக்கப்படும்’ என்று கூறியதற்குக் கேள்வி கேட்ட கமல், கஸ்தூரியை “காக்கா” “சாத்தான்” என்றும் சேரனை “அந்த ஆள்” என்று கூறிய கவின் மற்றும் சாண்டியை ஏன் கேட்கவில்லை?

ஓவியா வெளியேறியபோது, அனைவரையும் தனித்தனியாக அழைத்து கேள்விகளைக் கேட்ட கமல், மதுமிதா வெளியேறிய போது எதுவும் நடக்காதது போல அமைதியாக சாண்டி & கோவிடம் சிரித்துச் சிரித்து பேசிக்கொண்டிருந்தார்.

சீசன்2-ல் மைக்குடன் ஐஸ்வர்யாவை ஸ்விம்மிங் பூலில் தள்ளிவிட்ட பொன்னம்பலத்தைச் சிறைக்குள் அனுப்பிய பிக்பாஸ், இம்முறை முகேன் கட்டிலை உடைத்தற்குப் பெரிதாக எந்த கேள்வியும் கேட்கவில்லை.

ஆக இம்முறை அனைவரையும் ஆடவிட்டு, மக்கள் விரும்புபவரை வெளியேற்றும் படலமே நடந்து கொண்டிருக்கிறது.

Bala Trust

About Admin

Check Also

தனுஷ் 45 படத்தில் செல்வராகவனுடன் இணைந்த தனுஷ்: வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்

தனுஷ் அடுத்தடுத்து நிறைய படங்களில் நடித்து வருகின்றார். அசுரன் படத்தில் இருந்து இடைவெளி விடாமல் நிறைய படங்களில் நடித்து வருகிறார் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES