தமிழக அரசின் பால் உயர்வை கண்டித்து மதுரை மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி பரவை மண்டல் சார்பாக அதன் தலைவர் ரமேஷ் கண்ணன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மண்டல் பொதுச் செயலாளர் துரைபாஸ்கர் வீரக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் பரவை பேரூர் தலைவர் ஜெகநாதன் வரவேற்புரை ஆற்றினார் இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட விவசாய அணி முன்னாள் மாநகர் தலைவர் முத்துப்பாண்டி முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் செல்வகுமார் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவபாலன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். இந்நிகழ்வில் எஸ்டி எனி மாவட்ட தலைவர் எம் கே முருகன் மற்றும் மண்டல் நிர்வாகிகள் பாலமுருகன் மீனாட்சிசுந்தரம் மோகன் கோவிந்தன் மாரிசாமி பாலாஜி தனபாலன் மணிகண்டன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்