மதுரை, ஜனவரி,04-
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் அன்னை வசந்தா டிரஸ்ட் மாலை நேர வள்ளலார் பயிற்சி பள்ளியில் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே பிறந்தநாள் மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்த நாள், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் ஆகிய முப்பெரும் விழா டிரஸ்ட் தலைவர் அமுதவள்ளி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு டிரஸ்ட் பொருளாளர் அருள்ஜோதி ஆறுமுகம் முன்னிலை வகித்தார். வள்ளலார் பயிற்சி பள்ளியின் தலைமை ஆசிரியர் பவித்ரா பாண்டி அவர்கள் வரவேற்று பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக உதவும் உள்ளங்கள் மாநில தலைவர் சிவ.ராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மக்களுடன் ஓமியோபதி செய்தி தொடர்பாளர்கள் டாக்டர் ரவீனா, டாக்டர் பவானி சுந்தரி, தமிழ் ஆசிரியர் விஜயா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் பெருமைகள் குறித்து தொடக்கப் பள்ளி ஆசிரியர் சித்ரா பேசினார்.
டிரஸ்ட் நிறுவனர் எஸ்.எம் ரகுபதி, ஆசிரியர் சிவஜோதிகா, டிரஸ்ட் கௌரவ ஆலோசகர் அழகர்சாமி, டிரஸ்ட் ஒருங்கிணைப்பாளர் கணேசமூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நிகழ்ச்சியின் முடிவில் டிரஸ்ட் செயலாளர் சித்ரா ரகுபதி நன்றி கூறினார்.