இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், அசஞ்சர் பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் இணைந்து பயிற்சி நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் ம.அ.சுப்புராமன் தலைமையிலும், தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள்ரூபி ஆகியோரின் முன்னிலையிலும் நடைபெற்றது.
பொதுச்செயலாளர்
எஸ்.அங்குசாமி வரவேற்று பேசினார்.இ.டி.ஐ.ஐ முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் விழாவை துவக்கி வைத்து பேசினார்.
இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மதுரை மாநகராட்சி மேயர் திருமதி இந்திராணி பொன்வசந்த் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி பேசும்போது :-
பெண்கள் தொழில் முனைவோராக படித்து சான்றிதழ்கள் வாங்கியவுடன் உங்கள் பணி முடியவில்லை. துவக்க நிலையில் உள்ளது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உற்பத்தி செய்த பொருள்களை விற்பனை செய்து தொழில் முனைவோராக மாறும் போது தான் தன்னிறைவு அடைய முடியும் . தைரியம், தன்னம்பிக்கை தொழில் ரகசியம் விற்பனை செய்யும் திறமை, வங்கி கடனை மானியத்துடன் பெற்று தொழிலில் பெருக்க பல்வேறு யுத்திகளை கையாள வேண்டும். பெண்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என பேசினார்.
காவல்துறை ஆய்வாளர் வசந்தி DTP கம்ப்யூட்டர் பயிற்சி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு (TNSDC)திறன் மேம்பாட்டு கழகம் சான்றிதழை வழங்கி அனைவரையும் உற்சாகப்படுத்தும் வகையில் பேசினார்.
பொருளாதார ரீதியாக உயர்ந்து வாழ பெண்களுக்கு சுயதொழில் கை கொடுக்கும். ஆண்களை விட பெண்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குகிறார்கள். என்பதை நீங்களும் உறுதி செய்ய வேண்டும் என பேசினார்.
இந்நிகழ்வில் மதுரை மாநகராட்சி நகர் நல சுகாதார அலுவலர் டாக்டர்.விக்னேஷ் குமார், சமுதாய அலுவலர் பஞ்சவர்ணம், (மாநகராட்சி) ICICI வங்கி உதவி மேலாளர் சக்திவேல், தமிழ்நாடு கிராம வங்கி முதுநிலை மேலாளர் குணசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் கண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குடும்பநல ஆலோசகர் கதிரவன், கீர்த்திராஜ், சிவா, மகேஸ்வரி, விஜயவள்ளி, திவ்யா, கார்த்தியாயினி, ஐஸ்வர்யா மற்றும் பயிற்சியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.