Sunday , October 13 2024
Breaking News
Home / Politics / முதல்வர் தலைமையில் தொடங்கியது மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம்..

முதல்வர் தலைமையில் தொடங்கியது மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம்..

முதல்வர் தலைமையில் தொடங்கியது மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம்..

தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் 5வது கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு அரசை பொருத்தவரையில் தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்களுக்கான கொள்கைகளை வகுப்பது, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை நடத்துவது, திட்டங்களை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதில் திட்டக்குழுவின் பங்கு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த மாநில திட்ட குழுவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைவராக இருந்து வருகிறார். துணை தலைவராக பொருளாளர் ஜெயரஞ்சன் , முழு நேர உறுப்பினர்கள் மற்றும் பகுதிநேர உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில் மாநிலத்திட்ட குழுவின் ஐந்தாவது கூட்டமானது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, மாநில வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட நிர்வாகக் கொள்கை, சுற்றுலாக் கொள்கை உள்ளிட்ட 11 கொள்கைகளின் நிலைகள் மற்றும் அரசின் முன்னோடி திட்டங்கள் பொதுமக்களை சென்றடைந்ததா என்பது தொடர்பான ஆய்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. திட்ட குழுவானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு 11 கொள்கை அறிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சரிடம் சமர்ப்பித்தது. அந்த 11 அறிக்கைகள் தொடர்பான ஆய்வறிக்கைகள், நடத்தப்பட்ட பயிலரங்கங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது மாநில திட்டக்குழுவானது, தமிழ் மொழி கலை – கலாச்சாரம் கொள்கை, வேலைவாய்ப்பு கொள்கை, பயிர் மேலாண்மை கொள்கை, கழிவு மேலாண்மை கொள்கை, நிலையான நிலப் பண்பாட்டுக் கொள்கை, தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான மேலாண்மை மற்றும் ஒழுங்குமுறை கொள்கை, வீட்டு வசதி கொள்கை உள்ளிட்ட ஆறு கொள்கைகளை தயாரித்து வருகிறது. இந்த கொள்கைகள் இறுதி செய்வது தொடர்பாகவும் இந்த திட்டக் குழுவில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இறுதியாக திட்டக்குழுவால் செயல்படுத்தப்பட்ட பல்வேறு பணிகள் மற்றும் கொள்கைகள் தமிழக அரசில் எவ்வாறு எதிரொலித்தது என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக உரையாற்றுகிறார்.

Bala Trust

About Admin

Check Also

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமியை, முன்னாள் இந்திய வருமான வரித்துறை உயர் அதிகாரி எம்.சம்பத் சந்தித்து பேசினார்

அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத்தின் மாநில தலைமை கழக செயலாளர் எஸ்.வேலுச்சாமி அவர்களை மதுரை அண்ணாநகரில் அவரது அலுவலகத்தில் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES