Sunday , February 1 2026
Breaking News
Home / தமிழகம் / குழந்தைகள் தினவிழா மாநில அளவிலான போட்டிகளில் கரூர் மாவட்டம் முதலிடம்…
NKBB Technologies

குழந்தைகள் தினவிழா மாநில அளவிலான போட்டிகளில் கரூர் மாவட்டம் முதலிடம்…

பாரத சாரண சாரணியர் இயக்கம் சார்பாக குழந்தைகள் தினவிழாவினை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மாவட்ட ,மண்டல மற்றும் மாநில அளவில் நடைப்பெற்றன.இதில் பல்வேறு பள்ளியைச்சார்ந்த மாணவர்கள் பங்கு பெற்றனர்.இதில் மாநில அளவில் மாறுவேடப்போட்டியில் கரூர் மாவட்ட டி.என்.பி.ல். பப்ளிக் பள்ளி மாணவி மகதி குருளையர் பிரிவில் முதலிடம் பெற்றார்.
இம்மாணவியையும் பிற போட்டிகளில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவச்செல்வங்களையும் மாவட்ட முதன்மை ஆணையரும் முதன்மைக்கல்வி அலுவலருமான மதன்குமார் அவர்களும் மாவட்ட ஆணையர்/மாவட்ட கல்வி அலுவலர் விஜயேந்திரன் அவர்களும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினர்.

இந்நிகழ்வினை கரூர் மாவட்ட சாரண ஒருங்கிணைப்பாளர் இரவிசங்கர் ஏற்பாடு செய்திருந்தார். மாவட்ட பயிற்சி ஆணையர் முத்துச்சாமி,மாவட்ட அமைப்பு ஆணையர் வெங்கடேசன் ,
பண்டக காப்பாளர் அண்ணாதுரை மற்றும் சாரண பொறுப்பு ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES