Thursday , September 19 2024
Breaking News

இளைஞர் குரல்

YouTube player

தந்தையை இழந்த கல்லூரி மாணவனுக்கு ஒரு லட்சம் நிதியுதவி வழங்கிய சிங்கப்பூர் குரு சித்தம் பெருங்குடில் அமைப்பின் நிறுவனர்…!

சிவகங்கை மேலமங்கத்தில் வசித்து வரும் கனரக ஊர்தி ஓட்டுநரான ஜோர்ஜ் டோமினிக்(49)அவர்கள் கடந்த மாதம் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மூத்த மகனான அலோசியஸ் என்பவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பெட்ரோலியம் என்ஜினியரிங் துறையில் நான்காம் ஆண்டில் கல்வி கற்று வருகிறார். மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பமாக இருந்தாலும் தன் மகனை படிப்பிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தந்தை இரவு பகலாக வேலை செய்து இவரது படிப்பிற்கான செலவுகளை …

Read More »

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது…

கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் நிலச் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கு செல்வப்பெருந்தகை MLA அவர்கள் தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திரு K V தங்கபாலு Ex MP, சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் திரு ராஜேஷ்குமார் MLA, தமிழ்நாடு காங்கிரஸ் பொருளாளர் திரு ரூபி மனோகரன் MLA ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் …

Read More »

கு.செல்வப்பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அறிக்கை…

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் பரப்புரையில் நரேந்திர மோடி நிறைய வாக்குறுதிகளை கொடுத்து 2019 வரை அதை நிறைவேற்றாமல், மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி 2024 மக்களவை தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையில்லாத நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமராக பொறுப்பேற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் சிறுபான்மை, பட்டியலின மக்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சின் மூலம் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன. விவசாயிகளுக்கு எதிராக அடக்குமுறை ஏவிவிடப்பட்டது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க …

Read More »

விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதிஸ்டாலின் அவர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கு.செல்வப்பெருந்தகை…

மாண்புமிகு திரு : உதயநிதிஸ்டாலின் அவர்கள், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சராக பொறுப்பேற்றதிலிருந்து சர்வதேச அளவில் தமிழ்நாட்டில் விளையாட்டுத்துறையை மேம்படுத்தப்பட வேண்டும்; தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்கள் உலக அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல்பட்டு வருகிறார். பல சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் திறம்பட வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். அவ்வகையில் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி …

Read More »

ராணிபேட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தலைவர் திரு.சி.பஞ்சாட்சரம் அவர்கள் தலைமையில் CSP மஹாலில் நடைபெற்றது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. கு செல்வப் பெருந்தகை MLA அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் திரு AM. முனிரத்தினம் MLA, துணைத் தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் ராணிபேட்டை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து கொண்டார்கள்.

Read More »

தெற்கு ஆசியாவில் சிறந்த மாநிலம் தமிழகம்..அமெரிக்காவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் மு.க.ஸ்டாலின் உரை…

சென்னை: இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இன்றைக்கு விளங்கிக் கொண்டிருக்கிறது எனவும், இந்தியாவில் உள்ள பெரிய மாநிலங்களில் அதிகளவில் நகரமயமாக்கப்பட்டுள்ள மாநிலம் தமிழ்நாடு தான் என சான்பிரான்சிஸ்கோ முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,”சான்பிரான்ஸிஸ்கோவின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்பதில் நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். உலகின் மிகப்பெரிய மதிப்புமிக்க பெருமை அமெரிக்காவிற்கு உண்டு என்பது அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிற உண்மை. அப்படிப்பட்ட அமெரிக்காவிற்கு நான் …

Read More »

தென்காசியில் பருவமழை தீவிரம்: குற்றாலம் அருவிகளில் குளிக்கத் தடை…

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், குற்றாலத்தின் பிரதான அருவி, ஐந்தருவியில் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலமான ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் சாரல் மழை பெய்யும். மலைப் பகுதியில் பெய்யும் மழையால் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். குளிர்ந்த தென்றல் காற்றுடன் அடிக்கடி பெய்யும் சாரல் மழை, ஆர்ப்பரிக்கும் அருவிகள் சுற்றுலாப் …

Read More »

காஷ்மீர் முதல் குமரி வரை ‘பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை’… ராகுல்காந்தி அறிவிப்பு!

நாடு முழுவதும் விரைவில் ‘பாரத தற்காப்பு கலை பயிற்சி யாத்திரை’ தொடங்கும் என்று வீடியோ வெளியிட்டு ராகுல்காந்தி கூறியுள்ளார். மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர்வரை பாரத ஒற்றுமை யாத்திரை நடத்தினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை மணிப்பூரில் இருந்து மும்பைவரை பாரத ஒற்றுமை நியாய யாத்திரை (ஜோடோ யாத்ரா) நடத்தினார். இந்நிலையில், ராகுல்காந்தி தனது ‘எக்ஸ்’ வலைத்தள …

Read More »

முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து!

தமிழகத்துக்கு அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கவும், படித்த இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், மேலும் பல புதிய தொழில்களை தமிழகத்தில் உருவாக்கும் முயற்சியாகவும், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து கடந்த 27-ம் தேதி இரவு விமானத்தில் புறப்பட்ட அவர், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்துக்கு நேற்று காலை சென்றடைந்தார். மனைவி துர்கா ஸ்டாலினும் உடன் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அமெரிக்கா வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக …

Read More »

டி.என்.பி.எஸ்.சி. தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிப்பு.. முழு விவரங்கள்..!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.105 பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நவம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்கள் தேர்வு நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான விண்ணப்ப விநியோகம் தற்போது தொடங்கியுள்ளதாகவும் செப்டம்பர் 28ஆம் தேதி வரை இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ …

Read More »
Bala Trust
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES