![](https://ilangyarkural.com/wp-content/uploads/2025/02/1004205279-1024x458.jpg)
மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி மலை மேல் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா மலைக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, முப்பையூர் உள்ளிட்ட நான்கு இடத்தில் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமி அவர்களின் தலைமையில் பக்தர்களுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வாழை இலையில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தி வருகின்றனர்.
![](https://ilangyarkural.com/wp-content/uploads/2025/02/1004206369-1024x576.jpg)
மேலும் மதுரை நகரில் காளவாசல், ஆண்டாள்புரம், சாய்பாபா கோவில், ரயில்வே நிலையம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு வாகனத்தில் சென்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
![](https://ilangyarkural.com/wp-content/uploads/2025/02/1004206372-1024x576.jpg)
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மாநகர் முழுவதும் காரில் சென்று ஆதரவற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்றது.
வாகனத்தில் சென்று அன்னதானம் வழங்கும் பணி மற்ற மூன்று மாவட்டங்களிலும் விரைவில் தொடங்க உள்ளோம் என ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் தெரிவித்தார்.