கரூர் அருகே கம கமன்னு விருந்து அனைவருக்கும் சிக்கன் பிரியாணி | பஞ்சாயத்து தலைவர் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து ஊரே ஒன்று கூடி விழா எடுத்த சுவாரஸ்யம் | வீடு வரை கொண்டு சென்று வழி அனுப்பிய பொதுமக்கள் | செய்த சாதனைகளை சொந்த நிதி செயல்பாட்டு அறிக்கையாக புத்தகம் | 40 பக்கம் கொண்ட புத்தகத்தினை வெளியிட்ட பஞ்சாயத்து தலைவர்
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, கடவூர் ஊராட்சி ஒன்றியம், வரவணை ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்தவர் கந்தசாமி, இவரை கந்தசாமி ஐயா என்று தான் சொல்வார்கள். அந்த அளவில் மதிப்புமிக்க ஒரு எளியவர், முன்னாள் தலைமை ஆசிரியரும் கூட, இவரிடம் படித்த நல்ல மாணவர்கள் ஒரு அமைப்பாகவும், இவருடைய மகன் நரேந்திரன் கந்தசாமி, இதே பகுதியில் பசுமைக்குடி என்கின்ற தன்னார்வ அமைப்பினை நடத்தி வரும் நிலையில், ஏராளமான பகுதிகளில் சொந்த செலவில் மரங்களை நட்டு பின்னர் அதற்காக தினந்தோறும் தண்ணீரையும் ஊற்றி வரும் நிலையில், தற்போது அந்த மரக்கன்றுகள் அனைத்தும் மரங்களாகவே உருவெடுத்துள்ளன. இதுமட்டுமில்லாமல், பசுமைக்குடி மூலமாக விளைவித்த காய்கறிகளை, கொரோனா 1, கொரோனா 2 ஆகிய காலங்களில் வீடுகளிலே இருந்த மக்களுக்கு சுமார் 20 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல், இலவசமாக காய்கறிகளையும் தந்த ஒரு சமூக செயல் தமிழக அளவில் மிகுந்த பெயர் பெற்றது.



இப்புகழ்பெற்ற பசுமைக்குடி தன்னார்வ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நரேந்திரன் கந்தசாமியின் தந்தை, கந்தசாமி ஐயா அவர்களுடைய பஞ்சாயத்து தலைவர் பதவி நேற்றுடன் முடிவடைந்ததோடு, அவருக்கு ஊரே ஒன்று கூடி விழா எடுத்ததோடு, அனைவருக்கும் சிக்கன் பிரியாணிகளையும் பரிமாறப்பட்டுள்ளது.



இது மட்டுமில்லாமல், அவருக்கு பிரிவு உபச்சாரவிழா ஒன்றினை நடத்தி, அந்த விழா முடிந்த கையோடு அனைவரும் ஒன்று கூடி, அவரை வீடு வரை கொண்டு சென்று வழி அனுப்ப பட்ட சம்பவமும் மிகுந்த சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.


#varavanaikandasamy #narendrankandasamy #pasumaikudi #ilangyarkural