Monday , April 28 2025
Breaking News
Home / இந்தியா / தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்களின் ஒரு வருட பணி…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்களின் ஒரு வருட பணி…

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் முடிந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.

இந்த ஒரு வருடத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை துடிப்போடும் வலிமையோடும் வைத்துக் கொள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் எடுத்திருக்கிறார்.

பொறுப்பிற்கு வந்த உடனே பாராளுமன்ற தேர்தலில் எதிர்கொண்ட தலைவர் அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் இயக்கம் போட்டியிட்ட 9 பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடுமையாக உழைத்தார். வெற்றியும் கண்டார்.

பாராளுமன்றத் தேர்தல் முடிந்து விட்டதே கொஞ்சம் ஓயெவெடுப்பார் என அனைவரும் நினைத்த போது நோ ரெஸ்ட் என உடனே மாவட்ட வாரியாக இயக்கத்தின் வலிமையை கட்டமைப்பை தெரிந்து கொள்வதற்காக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தின் போது காங்கிரஸ் பல இடங்களில் கட்டமைப்பு இல்லாமல் இருப்பதை கண்டு உணர்ந்து கிராமங்களில் காங்கிரசைக் கட்டி எழுப்பினால் தான் காங்கிரஸ் கட்சி வலிமை பெறும் என்று முடிவு செய்தார். ஆகவே #கிராம_தரிசனம் என்கிற பெயரில் கிராமம் தோறும் காங்கிரஸ் கட்சியை கட்டி எழுப்ப முடிவு செய்து தமிழக காங்கிரஸ் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் மிக பெரிய அளவில் மாவட்ட வாரியாக சட்டமன்ற தொகுதி வாரியாக, கிராம வாரியாக, வார்டு வாரியாக காங்கிரஸ் கட்சியை கட்டயமைக்க கிராம கமிட்டிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த QR code உடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் வேலையையும் தொடங்கியும் வைத்து விட்டார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிக மிக உற்சாகமான வரவேற்ப்பை நேரில் கண்டவன் என்கிற முறையில் சொல்கிறேன். கிராம கமிட்டி அமைக்கும் பணியில் மராத்தான் போல ஜூம் மீட்டிங் பலவற்றை காலையும் மாலையும் ஒவ்வொரு நாளும் 4-5 மணி நேரம் நடத்தியிருக்கிறேன். அதில் கலந்து கொண்டு கருத்துக்களையும் பணியின் நிலவரத்தையும் ஒவ்வொரு நிர்வாகிகளின் முகத்தையும் அதில் தெரியும் உற்சாகத்தையும் நேரில் கண்டிருக்கிறேன். நினைவில் வைத்திருக்கிறேன். அந்த கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு எவ்வளவு சிரமம் இருந்தாலும் பணிகள் இருந்தாலும் மீட்டிங் போராட்டம் என எது இருந்தாலும் அண்ணன் செல்வப்பெருந்தகை நேரம் ஒதுக்கி கலந்து கொண்ட விதம் அவருக்கு இந்த முன்னெடுப்பில் இருந்த அக்கறையும் ஈடுபாடும் பார்த்து மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்திருக்கிறேன். வேலை வாங்குவதில் இவர் ஒரு டிரில் மாஸ்டர் என்று கூட நினைத்திருக்கிறேன் 🙂 . இன்னும் 20-30 ஆண்டுகளுக்கு இவர் கொடுத்த ஐடி கார்டும் கிராம கமிட்டி அமைத்தலும் பெருமையாக பேசப்படும் என்பதில் மாற்று கருத்தில்லை. எழுதி வைத்து கொள்ளுங்கள்.

இந்த ஓராண்டு காலத்தில் பாஜக செய்யும் அட்டூழியங்களை கண்டித்து பல்வேறு போராட்டங்களை முன் நின்று நடத்தி இருக்கிறார் அண்ணன் செல்வப்பெருந்தகை.

தலைவரின் பணி மேலும் மேலும் சிறக்கட்டும். காங்கிரஸ் பேரியக்கம் மேலும் மேலும் வளரட்டும். உங்களோடு பயணிப்பதில் பணி செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் அண்ணன்.

KT Lakshmi Kanthan (State Chairman, Information Technology & Social Media Department at Indian National Congress – Tamil Nadu)

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமத்திற்குட்பட்ட பாப்பனம்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளம் தூர் வாரும் திருவிழா…

வரவனை கிரமத்திற்குட்பட்ட 21 குளங்களையும் தூர் வார முடிவெடுத்து எயிட் இந்தியா மற்றும் கைஃபா அமைப்பின் உதவியுடன் பசுமைக்குடி தூர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES