வரவனை கிரமத்திற்குட்பட்ட 21 குளங்களையும் தூர் வார முடிவெடுத்து எயிட் இந்தியா மற்றும் கைஃபா அமைப்பின் உதவியுடன் பசுமைக்குடி தூர் வாரி வருகிறது. இதுவரை பாப்பனம்பட்டி அருகில் மத்தியமடைகுளம் , கோட்டப்புளிபட்டி மணியாரண்மடை குளம், தலையாரியூர் தலையாரிகுளம், சுண்டுக்குழிப்பட்டி குளம், பாப்பனம்பட்டி வெள்ளாட்டுக்காரன் குளம் ஆகிய குளங்கள் தூர் வாரும் பணி முடிவடைந்து 6 வது குளமாக பாப்பான்குளம் என்னும் குளம் தூர்வாரும் பணி ஆரம்பித்தது.
குளம் தூர் வாருவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் குளம் எப்படி பராமரிப்பது, விவசாயத்தை மீட்டெடுப்பது என்று பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. மட்டன் பிரியாணியுடன் நடந்த அசைவ விருந்தில் கிராம பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

வரவனை ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஜே சி பி டிரைவர் ஆதி மூலம் ஆகியோருக்கு ஊர் பொதுமக்கள் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இத்திருவிழாவை முன் நின்று நடத்திய பாப்பனம்பட்டி திரு. பழனிவேல், முன்னாள் கவுன்சிலர் திரு. நரசிங்கமூர்த்தி, திரு ஐயம்பெருமாள் ஆகியோர் மற்றும் ஊர் பொதுமக்களுக்கு நன்றி.
நரேந்திரன் கந்தசாமி
பசுமைக்குடி தன்னார்வ இயக்கம்