கரூர் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற காவலர்களுக்கு உதவி மையம் தொடங்கி கடந்த ஓராண்டு காலமாக சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். இதில் 40 குடும்ப ஓய்வூதியர்கள் இருக்கிறார்கள். இன்று (06/01/2025) பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் பொருள்களை தலைவர் திரு.D.ரெங்கராஜீ அவர்கள் தலைமையிலும் மற்றும் செயலாளர் திரு.P.வேலுசாமி, பொருளாலர். K.வீரமலை, து.தலைவர்கள் திரு.A. வடிவேல், திரு.P. முருகையன், துணை செயலாளர் திரு. K.கிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பனர்கள் முன்னிலையிலும் 40 குடும்ப ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டது.
உதவி மையம் சார்பாக,
- ஓய்வு பெற்று உடல் நலம் பாதிக்கப்படோருக்கு உடன் இருந்து மருத்துவமனையில் சேர்க்க உதவிகள் செய்வது.
- மருத்துவமனை செலவுகளை பெற படிவம் தயார் செய்து கரூவூலத்தில் கொடுத்து மேல் நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தபட்ட அதிகாரிகளிடம் கூறுவது.
- காவல் ஆளினர்கள் இறந்துவிட்டால் அவர் துணைவியாருக்கு ஓய்வூதியம் பெற்றுத்தர அனைத்து நடவடிக்கை மேற்க்கொள்வது போன்ற கடமைகளை செய்வது.














#police #karur #retiredpolicehelp #velusamy #ilangyarkural
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்
