Friday , February 6 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
NKBB Technologies

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.

மதுரை பிப் 06

மதுரை கோ.புதூர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளித் தாளாளர் முகமது இதிரிஸ் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் ஷேக் நபி வரவேற்புரையாற்றினார்.

மதுரை வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.தளபதி, மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கி தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் மாணவர்கள் பயன்படுத்தி கல்வி கற்று வாழ்வில் மென்மேலும் உயர வேண்டும் என்று வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வில் 10-வது வட்ட திமுக பொறுப்பாளர் ஆழ்வார், பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகம், புதூர் பகுதி செயலாளர் புண்ணிய மூர்த்தி, திமுக வட்டச் செயலாளர் வி.சி.மாதவன், திமுக 12-வது வட்டச் செயலாளர் மருது, திமுக 14-வது வட்டச் செயலாளர் வேலு, இளைஞர் அணி பகுதி செயலாளர் பாபு, 14-வது வார்டு மாமன்ற உறுப்பினர் அந்தோணியம்மாள் சவரிராயன் மற்றும் புதூர் பகுதி பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

தமிழாசிரியர்கள் தெளபீக் ராஜா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க வழங்க நூருல்லாஹ் நன்றியுரையாற்றினார். விழா ஏற்பாடுகளை உதவித் தலைமை ஆசிரியர் அல்ஹாஜ் முகமது செய்திருந்தார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை கனகராஜ்..

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES