Thursday , December 12 2024
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு 250-வது நாளாக உணவளித்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை..
MyHoster

மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு 250-வது நாளாக உணவளித்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை..

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கும், அவர்களுடன் உடன் இருப்பவர்களுக்கும் தொடர்ந்து இடைவிடாமல் 250-வது நாளாக உணவு வழங்கி வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்கள் வைகை ஆற்றை காக்கும் விதமாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் இடம் அருகே உள்ள கல்பாலத்தில் ஆகாயத்தாமரைகள் தொடர்ந்து அகற்றி வருகிறார்.

மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் அவர்களை கவனித்து வரும் காப்பாளர்கள் என தினமும் ஆயிரம் பேருக்கு,உணவு, குடிநீர், மற்றும் பழங்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இந்த அருமையான சேவையால் இதுவரை சுமார் இரண்டரை லட்சம் பேர்கள் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களின் தலைமையில், அரசு ராஜாஜி மருத்துவமனையில் 250-வது நாள் உணவு வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஜஸ்டின் பிரபாகரன் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு, குடிநீர், ஆப்பிள் பழங்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

உணவு வாங்குவதற்காக வந்த ஒரு முதிய பெண்மணி நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை நிறுவனர் ஸ்டார் குரு அவர்களை நோக்கி கும்பிட்டு, நீங்கள் வழங்கும் உணவு தினமும் பயனுள்ளதாக இருப்பதாகவும், உங்களது சேவை தொடர்ந்து நடைபெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன் என கூறிச் சென்றதை காணும் போது நெகிழ்ச்சியாக இருந்தது.

இந்நிகழ்வில் சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் முத்துக்குமார் மற்றும் ராஜபாண்டி, ஹார்விபட்டி குமார் உட்பட நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக கரூர் விஷன் 2030 நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கள்….

வணக்கம்..! அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் சார்பாக President செந்தில் விஷ்ணு ராம், CII அமைப்பு சார்ந்த சேர்மன், கோ சேர்மன், …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES