
தமிழக மக்களின் கலாச்சாரம் மற்றும் பண்புகளை பிரதிபலிக்கும்
‘சவுத் இந்தியன் பேங்க்’ -ன் பொங்கல் விளம்பர திரைப்படம் வெளியீடு!
சென்னை ஜன
இந்தியாவின் தனியார் துறை வங்கிகளில் முன்னணி வகிக்கும் சவுத் இந்தியன் பேங்க் தமிழக மக்களுடனான தனது நீண்டகால பிணைப்பையும், தமிழ்நாட்டின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விழுமியங்களையும் போற்றி கொண்டாடும் வகையில் பொங்கல் திருவிழாவை மையமாகக் கொண்ட ஒரு விளம்பர திரைப்படத்தை வெளியிட்டிருக்கிறது.
தமிழ்நாட்டின் ஒரு பகுதியைப் பின்புலமாக கொண்டு நடைபெறும் நிகழ்வாக இந்த விளம்பரப் படம் (https://www.youtube.com/watch?v=_aelKdswOrE) உருவாக்கப்பட்டுள்ளது. அறுவடைத் திருநாளான பொங்கலை மக்கள் ஒன்று கூடி எப்படிக் கொண்டாடுகிறார்கள் என்பதை இத்திரைப்படம் அழகாகச் சித்தரிக்கிறது. குடும்ப உறுப்பினர்கள் மீண்டும் ஒன்றுகூடி சந்திப்பது, பல்வேறு தலைமுறைகளுக்கு இடையிலான உரையாடல் மற்றும் பொங்கல் பண்டிகைக்கே உரிய தனித்துவ அம்சமான அன்பும் மகிழ்ச்சியும் கலந்த பிணைப்பு போன்ற அன்றாட வாழ்வியல் தருணங்களை இத்திரைப்படம் மிக இயல்பாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. இதில் சவுத் இந்தியன் பேங்க் ஒரு வெறும் வங்கியாக மட்டுமல்லாமல், தமிழ்நாடு மக்களின் வாழ்வோடும் சமூகத்தோடும் பின்னிப்பிணைந்த ஒரு அங்கமாக இணைந்திருப்பது நேர்த்தியாகவும், சுவாரஸ்யமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.
‘உறவுகள்தான் தமிழகத்தின் வலிமை’ என்ற மையக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விளம்பரம் உருவாக்கப்பட்டுள்ளது. இது சவுத் இந்தியன் பேங்க் பின்பற்றி வரும் ‘1929-ம் ஆண்டு முதல் உறவுகளில் முதலீடு செய்தல்’ என்ற தத்துவத்திற்கும், தமிழகப் பண்பாட்டின் வலிமைக்கும் இடையிலான பிணைப்பை அழகாக இவ்விளம்பரம் எடுத்துக்காட்டுகிறது. தமிழகத்தின் உண்மையான செல்வம் என்பது அதன் மக்களும், அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டுள்ள ஆழமான பிணைப்புமே என்பதை இத்திரைப்படம் உணர்த்துகிறது. நிலைத்து நீடிக்கும் நல்லுறவுகளே வலுவான வளர்ச்சிக்கான அடித்தளம் என்ற இந்த வங்கியின் நம்பிக்கையையும் இது எதிரொலிக்கிறது.
இந்தச் சிறப்பு விளம்பர திரைப்படம் குறித்து சவுத் இந்தியன் பேங்க்-ன் துணைப் பொது
மேலாளர் மற்றும் சென்னை பிராந்திய தலைவர் ஈஸ்வரன் எஸ். கூறுகையில், இந்த பொங்கல் பண்டிகை காலத்தில், நம்பிக்கை மற்றும் பகிர்ந்து கொள்ளப்படும் பண்புகளால் உருவான நல்லுறவுகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம். தமிழக மக்களுடனான எங்களது உறவு மிகவும் வலுவானது. மக்களின் அன்றாட வாழ்வையும் சமூகப் பிணைப்பையும் பிரதிபலிக்கும் நேர்த்தியான அம்சங்களை இந்த திரைப்படத்தின் மூலம் நாங்கள் சுட்டிக்காட்டியிருக்கிறோம். இந்த விளம்பரத் திரைப்பட வெளியீட்டோடு சேர்த்து, எங்கள் வாடிக்கையாளர்களுக்காகக் கவர்ச்சிகரமான பொங்கல் திருவிழா
சலுகைகளோடு, வங்கியின் பல்வேறு திட்டங்களின் விரிவான தொகுப்பையும் நாங்கள் வழங்குகிறோம்,” என்றார்.
சவுத் இந்தியன் பேங்க்-ன் சந்தைப்படுத்தல் பிரிவு தலைவர் ரமேஷ் கே.பி. கூறுகையில், “சவுத் இந்தியன் பேங்க் தமிழகத்தில் ஒரு மிக முக்கியமான சந்தையாகும். இப்பகுதி மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட, நாங்கள் சேவையாற்றும் சமூகங்களோடு நெருக்கமான பிணைப்பு கொண்ட, உள்ளூர் பண்டிகைகளைக் கொண்டாடும், ஒரு ‘அண்டை வீட்டு வங்கி’ என்ற எங்களின் அடையாளத்தை இந்தப் பொங்கல் விளம்பரத் திரைப்படம் மேலும் உறுதிப்படுத்துகிறது,” என்றார். எளிமையான மற்றும் உணர்ச்சிகரமான கதைக்களத்தின் மூலம் இத்திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ‘ஹியூமன் ஸ்டோரிஸ்’ நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு, ‘ஃபர்ஸ்ட் பிக்சர் ஷோ கம்பெனி’ தயாரிப்பில் உருவான இத்திரைப்படம், டிஜிட்டல் தளங்களில் வெளியான மூன்றே நாட்களில் 4 கோடிக்கும் அதிகமான பார்வைகளைக் கடந்து தமிழ்நாட்டின் மக்கள் மத்தியில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் குரல் இனி ஒரு விதி செய்வோம்