மதுரை ஜெய்ஹிந்த்புரம் ரமணா ஸ்ரீ கார்டன் பகுதியில் உள்ள தமிழக இந்து மகா சபா அலுவலகத்தில், இந்து இயக்கத்தை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து ஏராளமான தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு வருடத்தில் 10 லட்சம் பேருக்கு விலை இல்லா உணவு, குடிநீர், பழவகைகள் வழங்கிய நட்சத்திர நண்பர்கள் அமைப்பினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது
மதுரையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. அதன் நிறுவனத்தலைவர் ஸ்டார் குருசாமி தலைமையில் தினமும் அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரு வருடமாக ஆயிரம் பேருக்கு உணவு, குடிநீர், பழ வகைகள் வழங்கி வருகின்றனர்.
மேலும் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் 350-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை நிறுவி வைகை ஆற்றில் குப்பைகள் போடாமலும் கண்காணித்து வருகின்றனர். மேலும் வைகை ஆற்றில் படர்ந்து கிடக்கும் ஆகாயத் தாமரைகளையும் ஜே.சி.பி இயந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.
சாலை ஓரத்தில் வியாபாரம் செய்பவர்களுக்கு தேவையான ராட்சத நிழற்குடையும் சாலையோரத்தில் வசிப்பவர்களுக்கு போர்வை, கம்பளி முதலியவைகளும் வழங்கி வருகின்றனர். மற்றும் அரசு பள்ளிகளுக்கு நவீன கழிவறைகளை கட்டித் தந்து வருகின்றனர்.
வசதியற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு படிப்பு உதவி தொகையும் வழங்கி வருகின்றனர். மழை,புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளையும் வெளி மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று வழங்கி வருகின்றனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான அத்தியாவசிய அடிப்படை பொருட்கள் மற்றும் மருத்துவ கருவிகளையும் தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளையின் ஒரு வருடம் நிறைவு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை கொண்டாடும் வகையில் நிறுவனத் தலைவர் ஸ்டார் குருசாமி தலைமையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 5.000 பேருக்கு விலையில்லா உணவு குடிநீர், பழ வகைகள் வழங்கினார்கள்.
இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை மதுரை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் துணை ஆணையாளர் திருமலைக்குமார் தொடங்கி வைத்தார். உயர்நீதிமன்ற குற்றவியல் அரசு வழக்கறிஞர் அன்புநிதி, மதுரை மாவட்ட குற்றவியல் துறை அரசு வழக்கறிஞர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் நட்சத்திர நண்பர்கள் அமைப்பின் சட்ட ஆலோசகர் வக்கீல். முத்துக்குமார், போக்குவரத்து காவல் ஆய்வாளர் பஞ்சவர்ணம், தொழிலதிபர் டி.கே.எஸ்.ராஜபாண்டி, ஹார்விப்பட்டி குமார், வழக்கறிஞர் முத்துக்கருப்பன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஸ்ரீ விஜயலட்சுமி இன்டர்நேஷனல் ஸ்கூல் – அரவக்குறிச்சி, ஸ்ரீ ரத்தின மருத்துவமனை – கரூர் & அரவக்குறிச்சி ரோட்டரி கிளப் இணைந்து நம்ம அரவை நம்ம மாரத்தான் நடத்துகின்றன. உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறோம்.
நம்ம அரவை நம்ம மாரத்தான் 2025க்கான பதிவு இணைப்பைக் கீழே காணவும்.
வழித்தடம் 1: 1 கிலோமீட்டர் – 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு (இருபாலர்) அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் — ஏவிஎம் கார்னர் — பூப்பந்தல் சாலை — பெரிய கடைவீதி — அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம்
வழித்தடம் 2: 3 கிலோமீட்டர் – மாணவ/மாணவிகளுக்கு (இருபாலருக்கும் தனித்தனியாக) அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் — ஏவிஎம் கார்னர் — காமராஜ் நகர் — பொன் நகர் — காவல் நிலையம் — பல்லவன் வங்கி வழியாக (பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம்) — மாரியம்மன் கோவில் (GH எதிர்ப்புறம் உள்ள பாதை) — அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம்
வழித்தடம் 3: 5 கிலோமீட்டர் – 16 வயதிற்கு மேற்பட்ட ஆண்/பெண் (இருபாலருக்கும் தனித்தனியாக) அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம் — ஏவிஎம் கார்னர் — காமராஜ் நகர் — கரடிபட்டி — ராஜபுரம் ரோடு — அருவி ரைஸ் மில் — காவல் நிலையம் — பல்லவன் வங்கி வழியாக (பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம்) — மாரியம்மன் கோவில் (GH எதிர்ப்புறம் உள்ள பாதை) — அரவக்குறிச்சி தாலுகா அலுவலகம்
Marathon Date: 9th March 2025 (Sunday) | 6 AM | Near Aravakurichi Taluk Office
ஸ்ரீ விஜயலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளி கரூர் மாவட்டத்தில் தனித்துவமான கல்வி முறைகளையும், தேசிய அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் உருவாக்கி உள்ளது. அதுமட்டுமல்லாமல் மிகச் சிறந்த நடன ஆசிரியர்கள் மற்றும் பாடல் ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களை ஊக்குவித்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்து சென்று வெற்றி வாகையைச் சூட வைத்துள்ளது. மாணவர்களுக்கு ஏற்றவாறு மிகச் சிறந்த சூழ்நிலைகளையும் சிறந்த அனுபவம் மிக்க ஆசிரியர்களையும் கொண்டு கரூர் மாவட்டத்தில் தனித்துவமான பள்ளியாக ஸ்ரீ விஜயலட்சுமி இன்டர்நேஷனல் பள்ளி செயல்பட்டு வருகிறது என்பதைப் பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.
மதுரை மாநகர் மேற்கு தொகுதியை சேர்ந்த விளாங்குடியில்,திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், பத்திர பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மாபெரும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் தாராப்பட்டி கிளை கழகம் மற்றும், மாவட்ட பொறியாளர் அணி சார்பாக கிளைச் செயலாளர் பாலகுரு, புதூர் பழனி,பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சிவமுருகன்,முத்துப்பாண்டி, HMS காலனி ஆனந்தகுமார், மருதுபாண்டி, செந்தில், காமாட்சி, சாந்தி,திரவியம், சதீஷ்,முருகன், முத்துச்சாமி,சுதாகர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக அண்ணன் திரு கு. செல்வப்பெருந்தகை அவர்கள் பதவியேற்று ஒரு வருடம் முடிந்து இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.
இந்த ஒரு வருடத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தை துடிப்போடும் வலிமையோடும் வைத்துக் கொள்ள பல்வேறு கட்ட நடவடிக்கைகளை ஒவ்வொரு நாளும் எடுத்திருக்கிறார்.
பொறுப்பிற்கு வந்த உடனே பாராளுமன்ற தேர்தலில் எதிர்கொண்ட தலைவர் அவர்கள் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து காங்கிரஸ் இயக்கம் போட்டியிட்ட 9 பாராளுமன்ற தொகுதியிலும் ஒரு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற கடுமையாக உழைத்தார். வெற்றியும் கண்டார்.
பாராளுமன்றத் தேர்தல் முடிந்து விட்டதே கொஞ்சம் ஓயெவெடுப்பார் என அனைவரும் நினைத்த போது நோ ரெஸ்ட் என உடனே மாவட்ட வாரியாக இயக்கத்தின் வலிமையை கட்டமைப்பை தெரிந்து கொள்வதற்காக மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார். சுற்றுப்பயணத்தின் போது காங்கிரஸ் பல இடங்களில் கட்டமைப்பு இல்லாமல் இருப்பதை கண்டு உணர்ந்து கிராமங்களில் காங்கிரசைக் கட்டி எழுப்பினால் தான் காங்கிரஸ் கட்சி வலிமை பெறும் என்று முடிவு செய்தார். ஆகவே #கிராம_தரிசனம் என்கிற பெயரில் கிராமம் தோறும் காங்கிரஸ் கட்சியை கட்டி எழுப்ப முடிவு செய்து தமிழக காங்கிரஸ் வரலாற்றில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவில் மிக பெரிய அளவில் மாவட்ட வாரியாக சட்டமன்ற தொகுதி வாரியாக, கிராம வாரியாக, வார்டு வாரியாக காங்கிரஸ் கட்சியை கட்டயமைக்க கிராம கமிட்டிகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார். அந்த கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு உலகத் தரம் வாய்ந்த QR code உடன் கூடிய அடையாள அட்டை வழங்கும் வேலையையும் தொடங்கியும் வைத்து விட்டார். இதற்கு காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் மிக மிக உற்சாகமான வரவேற்ப்பை நேரில் கண்டவன் என்கிற முறையில் சொல்கிறேன். கிராம கமிட்டி அமைக்கும் பணியில் மராத்தான் போல ஜூம் மீட்டிங் பலவற்றை காலையும் மாலையும் ஒவ்வொரு நாளும் 4-5 மணி நேரம் நடத்தியிருக்கிறேன். அதில் கலந்து கொண்டு கருத்துக்களையும் பணியின் நிலவரத்தையும் ஒவ்வொரு நிர்வாகிகளின் முகத்தையும் அதில் தெரியும் உற்சாகத்தையும் நேரில் கண்டிருக்கிறேன். நினைவில் வைத்திருக்கிறேன். அந்த கூட்டங்களில் கலந்து கொள்வதற்கு எவ்வளவு சிரமம் இருந்தாலும் பணிகள் இருந்தாலும் மீட்டிங் போராட்டம் என எது இருந்தாலும் அண்ணன் செல்வப்பெருந்தகை நேரம் ஒதுக்கி கலந்து கொண்ட விதம் அவருக்கு இந்த முன்னெடுப்பில் இருந்த அக்கறையும் ஈடுபாடும் பார்த்து மகிழ்ச்சியும் வியப்பும் அடைந்திருக்கிறேன். வேலை வாங்குவதில் இவர் ஒரு டிரில் மாஸ்டர் என்று கூட நினைத்திருக்கிறேன் . இன்னும் 20-30 ஆண்டுகளுக்கு இவர் கொடுத்த ஐடி கார்டும் கிராம கமிட்டி அமைத்தலும் பெருமையாக பேசப்படும் என்பதில் மாற்று கருத்தில்லை. எழுதி வைத்து கொள்ளுங்கள்.
இந்த ஓராண்டு காலத்தில் பாஜக செய்யும் அட்டூழியங்களை கண்டித்து பல்வேறு போராட்டங்களை முன் நின்று நடத்தி இருக்கிறார் அண்ணன் செல்வப்பெருந்தகை.
தலைவரின் பணி மேலும் மேலும் சிறக்கட்டும். காங்கிரஸ் பேரியக்கம் மேலும் மேலும் வளரட்டும். உங்களோடு பயணிப்பதில் பணி செய்வதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்த்துக்கள் அண்ணன்.
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியட்நாம் தமிழ் சங்கம், வியட்நாம் தமிழ் வியாபாரிகள் சங்கம் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் ஆகியன இணைந்து ”வியட்நாம் உலகத் தமிழர் மாநாடு 2025” 21.02.2025 அன்று டனாங் நகரில் வியட்நாம் தமழ் சங்கத்தின் தலைவர் சித்த மருத்துவர் தணிகாசலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் திரு தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் திரு ராம் சங்கர், எத்தோப்பிய நாட்டின் தொழிலதிபர் டாக்டர் எம்.ஜே. ராஜேஷ், பாரத் கல்லூரியின் தாளாளர் திருமதி புனிதா கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
தமிழ்நாடு கல்வி ஆலோசகர் நல சங்கம் மற்றும் தமிழ்நாடு தனியார் கல்வி நிறுவன ஆசிரியர்கள் சங்கத்தின் சார்பாக மாநில அளவிலான விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் 75 ஆசிரியர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது , 75 பள்ளி முதல்வர்களுக்கு சிறந்த முதல்வர் விருது மற்றும் 300 ஆசிரியர்களுக்கு சிறந்த ஆசிரியர் விருது வழங்கப்பட்டது.
ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 10 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு சென்னை வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் குஜராத் மார்வாடி பல்கலைக் கழகத்தின் முதல்வர் விருதினை வழங்கினார்.
மதுரை மாவட்டம் மேலக்குயில்குடி மலை மேல் அமைந்திருக்கும் சீரடி சாய்பாபா மலைக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கிரிவலப் பாதை, சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, முப்பையூர் உள்ளிட்ட நான்கு இடத்தில் ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமி அவர்களின் தலைமையில் பக்தர்களுக்கு ஒவ்வொரு வியாழக்கிழமை அன்றும் மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை வாழை இலையில் மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அன்னதானத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு உணவருந்தி வருகின்றனர்.
மேலும் மதுரை நகரில் காளவாசல், ஆண்டாள்புரம், சாய்பாபா கோவில், ரயில்வே நிலையம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் ஆதரவற்றோர்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு வாகனத்தில் சென்று அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று வியாழக்கிழமை மாநகர் முழுவதும் காரில் சென்று ஆதரவற்றோர் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் பணிகள் நடைபெற்றது.
வாகனத்தில் சென்று அன்னதானம் வழங்கும் பணி மற்ற மூன்று மாவட்டங்களிலும் விரைவில் தொடங்க உள்ளோம் என ஸ்ரீலஸ்ரீ கருணாநிதி சுவாமிகள் தெரிவித்தார்.
இன்று வெள்ளிக்கிழமை (31.01.2025) அரியலூர், மின் நகரில் அமைந்துள்ள குமரேசன், சிவகாமி இல்ல புதுமனை புகு விழாவிற்கு மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் வருகை தந்து விழாவினை சிறப்பித்தார்.
அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.எஸ். இன்டர்நேஷனல் பள்ளியில் குடியரசு தின விழா மற்றும் சமுதாய விழா நடைபெற்றது. பள்ளி முதல்வர் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பள்ளப்பட்டி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிரியர் வடிவேல் அவர்கள் தேசியக்கொடி ஏற்றி விழா சிறப்புரை ஆற்றினார். சமுதாய விழாவின் நிகழ்வாக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து கண் சிகிச்சை முகாம் ஆனது காலை 8 மணி முதல் நடைபெற்றது.
oplus_1024oplus_1024
500 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு கண் சிகிச்சை பெற்றனர்.பள்ளி நிர்வாகச் செயலர் மற்றும் தாளாளர் முன்னிலை வகித்தனர். பள்ளி துணை முதல்வர் நன்றி கூறினார்.