
மதுரை மாநகர் மேற்கு தொகுதியை சேர்ந்த விளாங்குடியில்,திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், பத்திர பதிவுத்துறை அமைச்சருமான பி.மூர்த்தி தலைமையில் மாபெரும் பொது உறுப்பினர்கள் கூட்டம் மிக பிரமாண்டமாக நடைபெற்றது.
இதில் தாராப்பட்டி கிளை கழகம் மற்றும், மாவட்ட பொறியாளர் அணி சார்பாக கிளைச் செயலாளர் பாலகுரு, புதூர் பழனி,பொறியாளர் அணி மாவட்ட தலைவர் சிவமுருகன்,முத்துப்பாண்டி, HMS காலனி ஆனந்தகுமார், மருதுபாண்டி, செந்தில், காமாட்சி, சாந்தி,திரவியம், சதீஷ்,முருகன், முத்துச்சாமி,சுதாகர் உள்ளிட்ட 200 க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.