Monday , April 28 2025
Breaking News
Home / Politics / உலகத்திற்கே வழிகாட்டும் கரூர் ரங்கா பாலிமர்ஸ்…

உலகத்திற்கே வழிகாட்டும் கரூர் ரங்கா பாலிமர்ஸ்…

(09.11.2024) கரூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த மாண்புமிகு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் திரு ஆர். காந்தி, மாண்புமிகு மின்சாரத்துறை அமைச்சர் திரு. செந்தில்பாலாஜி மற்றும் கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்கள் ஆகியோர் ஸ்ரீ ரங்கா பாலிமர் நிறுவனத்தைப் பார்வையிட்டனர்.

ஸ்ரீ ரங்கா பாலிமர் வீணான பிளாஸ்டிக் பாட்டில்களில் இருந்து தரமான ஆடைகளைத் தயாரித்து உலக அளவில் தடம் பதித்து வருகிறது. சிறப்பான ஆடைகளைத் தயாரிப்பதோடு சுற்றுச்சூழலையும் காப்பது சிறப்பு. சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் உலகமே திணறிக்கொண்டிருக்கும் போது உலகத்திற்கே வழிகாட்டும் ரங்கா பாலிமர்ஸ் நிறுவனம் கரூரில் அமைந்திருப்பது பெருமை என்று கரூர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ஜோதிமணி அவர்கள் தெரிவித்தார்.

உடன் கரூர் மாவட்ட ஆட்சியர்,கைத்தறித் துறை செயலாளர், இயக்குனர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், கரூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் , இந்தியா கூட்டணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், கடவூர் வட்டம், வரவனை கிராமத்திற்குட்பட்ட பாப்பனம்பட்டியில் உள்ள பாப்பான்குளத்தில் குளம் தூர் வாரும் திருவிழா…

வரவனை கிரமத்திற்குட்பட்ட 21 குளங்களையும் தூர் வார முடிவெடுத்து எயிட் இந்தியா மற்றும் கைஃபா அமைப்பின் உதவியுடன் பசுமைக்குடி தூர் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES