
மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகள் பங்கேற்ற மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் இரத்ததான முகாம்..!
மதுரை ஜூலை 31
நம் தேசத்தின் பாரம்பரியமான காதி கிராமத் தொழில்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய த மதுரை காதி மாரத்தான் 2025 மற்றும் மாபெரும் இரத்ததான முகாம் இன்று வியாழக்கிழமை காலை 6.00 முதல் 7.00 மணி வரை, மதுரை காந்தி என்.எம்.ஆர் சுப்பராமன் மகளிர் கல்லூரி மாணவிகளால் அவ்வளாகத்தில் தொடங்கி, தெப்பக்குளம் சுற்றுச்சுவர் முழுவதும் சுற்றி இனிதே நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் இந்திய அரசு கிராமத் தொழில்கள் மற்றும் காதி வாரியத்தின் தலைவர் மனோஜ்குமார் மற்றும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் பொறுப்பு பதிவாளர், பேராசிரியர் மு.இராமகிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
அவர்களை கல்லூரி தலைவராகிய திரு எம்.கே.ஜவஹர் பாபு, தாளாளர் திருமதி எம்.வி. ஜனரஞ்சனிபாய், செயலாளராகிய திருமதி என்.எம்.ஹெச். கலைவாணி மற்றும் முதல்வர் முனைவர் கே.எஸ். கோமதி ஆகியோர் மரியாதையுடன் வரவேற்று சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமை காதி மற்றும் கிராமத் தொழில்கள் வாரியம், மதுரை பிராந்திய இயக்குநர் செந்தில் இராமசாமி, தேசிய சேவை திட்டம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம். பாண்டி மற்றும் துணை முதல்வரும் என்.எஸ்.எஸ். திட்ட அலுவலருமான முனைவர் எஸ்.மஹிமா ஆகியோர் இணைந்து இந்நிகழ்வை சிறப்பாக முன்னெடுத்தனர்.