Wednesday , December 17 2025
Breaking News
Home / செய்திகள் / டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு
NKBB Technologies

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்துவதில் உள்ள சிக்கல் குறித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை களைவது குறித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தில் காலி பாட்டில் திரும்பப் பெறும் திட்டம் 01.09.2025 முதல் டாஸ்மாக் நிர்வாகம் அமுல்படுத்தபடும் நிலையில் டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்களின் கூட்டுக்குழு சார்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தில் டாஸ்மாக் கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக் கோரி மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு காலி பாட்டில் திரும்பப் பெறும் வழிகாட்டு திட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் நெறிமுறைகளை வழங்கியுள்ளது.

இந்த வழிகாட்டி நெறிமுறையில் குழு அமைத்து அனைத்து தொழில் சங்கங்களின் கருத்துக்களை கேட்டறிந்து செயல்படுத்த கூறியுள்ளது. ஆனால் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் பின்பற்றாமல் இந்த திட்டத்தை தன்னிச்சையாக முடிவெடுத்து திட்டத்திற்கு போதிய பயிற்சி அளிக்காமலும், கால அவகாசம் வழங்காமலும், உடனடியாக செயல்படுத்துவது டாஸ்மாக் பணியாளர்களிடம் குழப்பத்தையும். அச்சத்தையும் ஏற்படுத்துவதால் உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குழு அமைத்து. டாஸ்மாக் தொழிற்சங்கங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி செயல்படுத்திட வேண்டும்,டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெற்று சேமித்து வைக்க போதிய இடவசதி இல்லாமல் உள்ளது.

ஆகையால் காலி பாட்டில்களை சேகரித்து பாதுகாக்க இடவசதியினை டாஸ்மாக் நிர்வாகம் ஏற்படுத்தி தரவேண்டும்,டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பற்றாக்குறை இருந்து வருகிறது. ஆகையால் இந்த திட்டத்தினை செயல்படுத்துவதில் மிகவும் சிரமம் இருக்கிறது. ஆகையால் இந்த புதிய திட்டத்திற்கு பிரத்யோகமாக டாஸ்மாக் நிர்வாகம் புதிய ஆட்களை தெரிவு செய்து இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களின் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை விலையை விட கூடுதலாக ரூ.10/- வசூலிக்கும் போது பணியாளர்களுக்கும். பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

மேலும் பணியாளர்களின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது,டாஸ்மாக் நிர்வாகம் ஏற்கனவே மதுக்கூடத்திற்கு காலிப்பாட்டில்களை வாடிக்கையாளர்களிடமிருந்து ஒப்பந்ததார்ருக்கும். சேகரித்து வைத்துக் கொள்ள உரிமம் வழங்கியுள்ளது. இந்த திரும்ப காலிப்பாட்டில்களை பெறும்போது மதுக்கடை பணியாளர்களுக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது,டாஸ்மாக் கடையில் விற்பனை செய்யப்படும் பாட்டில்களை அதே கடையில் மட்டுமே திரும்ப பெற வேண்டும் என்ற உத்தரவு சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவினை பின்பற்றாமல் உள்ளது.

வாடிக்கையாளர்கள் எங்கு வேண்டுமானாலும் காலி பாட்டில்களை திரும்ப பெறும் வகையில் உத்தரவு வழங்கிட வேண்டும்,டாஸ்மாக் பணியாளர்கள் காலி பாட்டில்களை சேகரித்து வைத்து கையாளும் போது உடையும் பாட்டில்களுக்கு எந்தவித இழப்பீடு தொகை பற்றி சுற்றறிக்கையில் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை உள்ளிட்ட கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தது

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பி.கே மூக்கையா தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ

கல்வித்தந்தை பி.கே.மூக்கையாத்தேவரின் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை அரசரடியில் உள்ள அவரது திருவருச்சிலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES