Thursday , December 12 2024
Breaking News
Home / Help2Help

Help2Help

ஹெல்ப் 2 ஹெல்ப் கரூர் இரத்த கொடையாளர் குழுவிலிருந்து அரசு மருத்துவமனைகளுக்கு இரத்த தானம் வழங்கும்.

எங்களுடன் நன்கொடையாளர்களாக சேர விரும்புவோர் கீழே உள்ள படிவத்தை நிரப்பவும். அரசு மருத்துவமனைக்கு, உங்கள் இரத்த வகை தேவைப்படும்போது உங்களைத் தொடர்புகொள்வோம்.

Help2Help will donate blood to government hospitals from the Karur Blood Donor Group.

Those who wish to join us as donors should fill out the form below. We will contact you when your blood type is needed.

இரத்தம் வேண்டுமா?

தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக கரூர் மாநகராட்சி ‘எனது குப்பை எனது பொறுப்பு ‘என்ற விழிப்புணர்வு நிகழ்வு

தமிழக அரசு அறிவித்துள்ள தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கத்தின் சார்பாக கரூர் மாநகராட்சி ‘எனது குப்பை எனது பொறுப்பு ‘என்ற விழிப்புணர்வு கள நிகழ்வை தான்தோன்றிமலை நகராட்சி பகுதியில் இன்று நடத்தியது. பொதுமக்களிடம் நேரில் சென்று தூய்மை ,வீட்டுத்தோட்டம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்தத் திட்டத்தின் அடிப்படை நோக்கம். நமது மரியாதைக்குரிய கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரவிச்சந்திரன் அவர்களின் ஆலோசனைப்படி நமது ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பு …

Read More »

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது.

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் அடுத்த சேவையாக இரத்ததான குழுவை தொடர்ந்து ஆடை தானக் குழு இன்று தொடங்கப்பட்டது. விழாவின் சிறப்பு விருந்தினர்களாககரூர் மாநகராட்சி முதல் பெண் மேயர் திருமதி.கவிதா கணேசன் அவர்களும் கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.இரவிச்சந்திரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு குழுவினைத் தொடங்கி வைத்துவாழ்த்துரை வழங்கினர். முன்னதாக முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அறிமுக உரையாற்றினார். ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்கள் மகேஸ்வரி , பாலமுருகன் …

Read More »

ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் ஹெல்ப் 2 ஹெல்ப் முதற் கூட்டம் கரூரில் இன்று…

ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் முதல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குழுவின் அடுத்த கட்ட நகர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. கரூரில் Eye Bank துவங்குவதற்காக நமது அமைச்சரை அணுகுவது என்று தீர்மானிக்கப்பட்டது. லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் சேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது. விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள்,பிரசாரங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளராக …

Read More »

தூத்துக்குடியில் ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்ததானக் குழு தன் சேவையைத் தொடங்கியது…

கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததானக் குழு கரூர் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. இதில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு.சையத் அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோமதி பிரியா அவர்களுக்கு மகப்பேறுக்காக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்தது. இச்செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர் திரு. சிவராஜ் உரிய நேரத்தில் இரத்தம் …

Read More »

இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்திய பேருந்து உரிமையாளர்…

கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததான குழு அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த இரத்ததான குழுவை விளம்பரப்படுத்த முடிவு செய்து தன்னையும் ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பில் இணைத்துக் கொண்ட வெள்ளியங்கிரி பேருந்து உரிமையாளர் திரு. கிரி அவர்கள், அவர்களது பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் போஸ்டர் அடித்து ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். Thiru. Giri …

Read More »

ஆனந்த் செஸ் அகடமி திரு V.S. சிவகுமார் செஸ் பயிற் – சிவராமன்

ஆனந்த் செஸ் அகடமி திரு V.S. சிவகுமார் செஸ் பயிற்றுனர் மட்டுமல்ல ஒரு செயல் வீரரும் கூட.Help 2 Help அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்பது அவரது கூடுதல் சிறப்பு. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்.அதனால் அவர் முன்னின்று நடத்தும் விழாக்களில் Help to Help அமைப்பை முன்னிலைப்படுத்துவது வழக்கம். சிவகுமார் அவர்களின் ஆனந்த் செஸ் அகடமியும் மனிதநேயமிக்க சிவசுப்ரமணி அவர்களின் சுமதி இனிப்பகமும் …

Read More »

#Help2Help தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கந்தசாமி, அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் பாராட்டு…

#Help2Help தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் கந்தசாமி என்ற முறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக #மாண்புமிகு#மதுவிலக்கு, #மின்சாரம் மற்றும் ஆயத்துறை#அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களிடம் பாராட்டு பெற்ற நிகழ்வு…. இந்தப் பாராட்டுக்கு உறுதுணையாக இருந்த முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அவர்களுக்கு மிக்க நன்றி… #நாள்: 12.12.2021#இடம்: அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம், கரூர்.

Read More »

இரத்த தானம் செய்து ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்த தான குழுவை துவக்கி வைத்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி…

ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்ததான குழுவின் துவக்க விழா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி இரத்த தானம் செய்து விழாவினை தொடங்கி வைத்தார். நிறைய தடவை இரத்ததானம் செய்தவர்களுக்கும், தன்னார்வ தொண்டர்களுக்கும், ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர்களுக்கு சான்றிதழ்களும், நூல்களும் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மருத்துவ கல்லூரி டீன் முத்துச்செல்வன், டிஆர்ஓ லியாகத், எம்எல்ஏ சிவகாமசுந்தரி, ஆர்எம்ஓ குமார்,அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், …

Read More »

அடையாள மீட்பு திரைப்படம் பாராட்டு விழா- ஹெல்ப் 2 ஹெல்ப் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன்,சதாசிவம்…

டிச.3. கரூர் மாவட்டம் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த அரசு ‘அடையாள மீட்பு ‘என்னும் தலைப்பில் திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார். திரைப்படத்தின் கதை பாடல்கள் இசை ஆகியவற்றின் பொறுப்புகளையும் அவரே ஏற்று உள்ளார். இப்படம் கரூர் உள்பட பல ஊர்களில் 15 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. மண்ணின் மைந்தர் என்ற முறையிலும், வளர்ந்து வரும் கலைஞர் என்று ஊர் கூடி வாழ்த்த வேண்டும் என்ற விருப்பத்துடனும் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் …

Read More »

ஆம்…தேதி வாங்கப் போனேன்…இச்சேதி வாங்கி வந்தேன் – சிவராமன்…

அன்பு நண்பர்களே, இரு நிகழ்ச்சிகளுக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களிடம் தேதி வாங்கப் போனேன். தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட துவக்க விழாவிற்கும்,Help 2 Help கரூர் இரத்ததான குழுவின் துவக்க விழாவிற்கும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க வேண்டி அமைச்சரின் தேதி வாங்கப் போனேன். சென்ற இடம் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேனிலைப்பள்ளி. அப்பள்ளியில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி அவர் பங்கேற்ற பள்ளி மாணவியரின் விழிப்புணர்வுக்காக‘நிமிர்ந்து …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES