அன்பு நண்பர்களே,
இரு நிகழ்ச்சிகளுக்காக அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களிடம் தேதி வாங்கப் போனேன்.
தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் கரூர் மாவட்ட துவக்க விழாவிற்கும்,
Help 2 Help கரூர் இரத்ததான குழுவின் துவக்க விழாவிற்கும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க வேண்டி அமைச்சரின் தேதி வாங்கப் போனேன்.
சென்ற இடம் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேனிலைப்பள்ளி.
அப்பள்ளியில் அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் ஆலோசனைப்படி அவர் பங்கேற்ற பள்ளி மாணவியரின் விழிப்புணர்வுக்காக
‘நிமிர்ந்து நில்
துணிந்து சொல்’
என்ற நிகழ்ச்சி கொண்டிருந்தது.
தமிழகத்திலேயே இம்மாதிரி ஒரு நிகழ்ச்சி கரூரில் தான் நடக்கிறது என்பதும், இதனால் கரூர் மாவட்டத்தில் கல்வி கற்று வரும் 26000 மாணவியர்கள் விழிப்புணர்வு பெற இருக்கிறார்கள் என்பதும் நான் அறிந்து கொண்ட செய்தி.
தமிழகம் முழுதும் இம்மாதிரியான நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்பது என்னைப் போல சமூக அக்கறை கொண்ட பலரின் விருப்பம்.
இந்நிகழ்ச்சி அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களின் சிந்தனையில் உதித்த கரு என்பதற்காக அவரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி இன்னும் ஓர் இனிப்பான தகவலை அறிவித்தார்.
“கரூர் மாவட்டத்தில் படிக்கும் மாணவ மாணவியரில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வோர் வெளி மாவட்டத்திற்கோ, வெளி மாநிலங்களுக்கோ செல்லும் செலவினை தனது அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்”
தேதி வாங்கப் போன எனக்கு கிடைத்த இனிப்பான சேதி இதுதான்.
ஆம்…. தேதி வாங்கப் போனேன்…. இச்சேதி வாங்கி வந்தேன்.
- சிவராமன்