உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வியட்நாம் தமிழ் சங்கம், வியட்நாம் தமிழ் வியாபாரிகள் சங்கம் மற்றும் பன்னாட்டு தமிழர் நடுவம் ஆகியன இணைந்து ”வியட்நாம் உலகத் தமிழர் மாநாடு 2025” 21.02.2025 அன்று டனாங் நகரில் வியட்நாம் தமழ் சங்கத்தின் தலைவர் சித்த மருத்துவர் தணிகாசலம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் திரு தொல். திருமாவளவன் அவர்கள் கலந்து கொண்டார்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு இரா. முகுந்தன், தில்லி தமிழ் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் திரு ராம் சங்கர், எத்தோப்பிய நாட்டின் தொழிலதிபர் டாக்டர் எம்.ஜே. ராஜேஷ், பாரத் கல்லூரியின் தாளாளர் திருமதி புனிதா கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
