Saturday , February 14 2026
Breaking News
Home / செய்திகள் / ஆனையூரில் உள்ள, மதுரை மாநகராட்சி வீடட்றோர் தங்கும் இல்லத்தில், டாக்டர் அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா
NKBB Technologies

ஆனையூரில் உள்ள, மதுரை மாநகராட்சி வீடட்றோர் தங்கும் இல்லத்தில், டாக்டர் அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா

ஆனையூரில் உள்ள, மதுரை மாநகராட்சி வீடட்றோர் தங்கும் இல்லத்தில் உள்ளவர்களுக்கு, டாக்டர் அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மையம் சார்பில், இலவச தீபாவளி புத்தாடைகள் வழங்கும் விழா, அம்பேத்கர் பெண்கள் மேம்பாட்டு மைய தலைவர் புஷ்பம் சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு சரஸ்வதி நாராயணன் கல்லூரி முதல்வர் எம் கண்ணன், பெட்கிராட் தலைவர் கிருஷ்ணவேணி, பொருளாளர் சாராள் ரூபி, துணைத்தலைவர் சுசிலா குணசீலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பெட்கிராட் நிர்வாக இயக்குனர் எம் சுப்புராம், துவக்க உரையாற்றினார். பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட, 3-வது வார்டு மாமன்ற உறுப்பினர் செல்வகணபதி கணேசன், மாமன்ற உறுப்பினர் பாபு, தி மு க வட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர், குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்து,புத்தாடைகளையும் சிறப்பு உணவையும், வழங்கினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பெட்கிராட் துணைத்தலைவர் சுசிலா குணசீலி, காப்பாளர் ஜெயலட்சுமி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தானப்ப முதலி தெரு இல்லத்தின் காப்பாளர், இந்திரா நன்றியுரை கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES