Thursday , January 29 2026
Breaking News
Home / Help2Help / தூத்துக்குடியில் ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்ததானக் குழு தன் சேவையைத் தொடங்கியது…
NKBB Technologies

தூத்துக்குடியில் ஹெல்ப் 2 ஹெல்ப் இரத்ததானக் குழு தன் சேவையைத் தொடங்கியது…

கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததானக் குழு கரூர் அரசு மருத்துவமனைகளில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இதில் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் திரு.சையத் அவர்களுக்கு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் கோமதி பிரியா அவர்களுக்கு மகப்பேறுக்காக இரத்தம் தேவைப்படுவதாக தகவல் கிடைத்தது. இச்செய்தியை அறிந்த மாத்திரத்தில் ஹெல்ப் 2 ஹெல்ப் ஒருங்கிணைப்பாளர் திரு. சிவராஜ் உரிய நேரத்தில் இரத்தம் வழங்க தூத்துக்குடியில் உள்ள நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்தார்.

இந்த சீரிய முயற்சியை எடுத்த ஒருங்கிணைப்பாளர்கள் சையத் அவர்களுக்கும் மற்றும் சிவராஜ் அவர்களுக்கும் ஹெல்ப் 2 ஹெல்ப் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

தூத்துக்குடியில் முதன்முதலாக ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் மூலம் உரிய நேரத்தில் இரத்த தானம் செய்ததற்காக ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பினை இளைஞர் குரல் சார்பாக பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES