Friday , December 19 2025
Breaking News
Home / Help2Help / இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்திய பேருந்து உரிமையாளர்…
NKBB Technologies

இரத்த தான விழிப்புணர்வு ஏற்படுத்திய பேருந்து உரிமையாளர்…

கரூர் மாவட்டத்தை மையமாகக் கொண்டு ஹெல்ப் 2 ஹெல்ப் என்ற இரத்ததான குழு அரசு மருத்துவமனையில் இருக்கும் ஏழை எளியோருக்கு இரத்ததானம் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது.

இந்த இரத்ததான குழுவை விளம்பரப்படுத்த முடிவு செய்து தன்னையும் ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பில் இணைத்துக் கொண்ட வெள்ளியங்கிரி பேருந்து உரிமையாளர் திரு. கிரி அவர்கள், அவர்களது பேருந்துகளில் முன்புறமும், பின்புறமும் போஸ்டர் அடித்து ஒட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார்.

Thiru. Giri – Velliyangiri Bus Owner

தினமும் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்யும் பேருந்தில் இது போன்ற விழிப்புணர்வு செய்து மக்களுக்கு விரைவாக சென்றடையும் வகையில் செய்துள்ளார்.

இந்த நிகழ்வை செய்த வெள்ளியங்கிரி பேருந்து உரிமையாளர் திரு. கிரி அவர்களுக்கு ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பினர் பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர்.

Help 2 Help Blood Donors Group

இளைஞர் குரல் சார்பாக ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பினருக்கும் வெள்ளியங்கிரி பேருந்து உரிமையாளர் திரு கிரி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில் 79வது சுதந்திர தினம் அரவக்குறிச்சி நகர தலைவர் திரு. ரயில்வே ராஜேந்திரன் தலைமையில் காந்தி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES