ஆனந்த் செஸ் அகடமி திரு V.S. சிவகுமார் செஸ் பயிற்றுனர் மட்டுமல்ல ஒரு செயல் வீரரும் கூட.
Help 2 Help அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் என்பது அவரது கூடுதல் சிறப்பு.
வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இரத்த தானம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவர்.அதனால் அவர் முன்னின்று நடத்தும் விழாக்களில் Help to Help அமைப்பை முன்னிலைப்படுத்துவது வழக்கம்.
சிவகுமார் அவர்களின் ஆனந்த் செஸ் அகடமியும் மனிதநேயமிக்க சிவசுப்ரமணி அவர்களின் சுமதி இனிப்பகமும் இணைந்து அண்மையில் வெளிநாடுகளில் நடப்பது போல் ஒரு வித்தியாசமான இயற்கை சூழலில் செஸ் போட்டி நடத்தின. வழக்கம்போல் ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பையும் இணைத்துக்கொண்டார் சிவக்குமார்.
இவ்விழாவில் நமது அழைப்பை ஏற்று கரூர் மாநகராட்சி ஆணையாளர் திரு. ரவிச்சந்திரன் கலந்து கொண்டு போட்டிகளைத் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் Help 2 Helpஅமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் திலகவதி, ரவிசங்கர், முகுந்தன் ஆகியோருடன் நானும் கலந்து கொண்டு நமது இரத்ததான சேவை குறித்து விளக்கிப் பேசினோம். அதன் பயனாக 10 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் தர முன்வந்தார்கள்.
இவ்விழாவின் மூலம் குருதிக் கொடையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு
காரணமாக இருந்த ஒருங்கிணைப்பாளர்கள் சிவகுமார், ஸ்காட் தங்கவேல் ஆகியோருக்கு நன்றி பல.
G.சிவராமன்
முதன்மை ஒருங்கிணைப்பாளர்
Help 2 Help.