Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் பாஜக விவசாய அணி சார்பாக பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம்
NKBB Technologies

மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் பாஜக விவசாய அணி சார்பாக பொதுமக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விளக்கம்

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே நாகராஜன் ஜி, விவசாய அணி மதுரை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்களின் தலைமையிலும், மாவட்ட பொதுச்செயலாளர் துரைபாஸ்கர் முன்னிலையிலும், அழகுராஜா ஏற்பாட்டில், மதுரை மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தில் வீடு,வீடாக சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து

மத்திய அரசின் திட்டங்களான பயிர் காப்பீட்டு திட்டம், வேளாண் சந்தை திட்டம், மண்வள அட்டை, பிரதமரின் வேம்பு கலந்த யூரியா திட்டம், பிரதமரின் விவசாயிகளுக்கான ரூபாய் 6000 வழங்கும் திட்டம், கிசான் பயிர் காப்பீட்டு திட்டம் போன்ற நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட செயலாளர் சுரேஷ் விளக்கி பேசினார்.

மேலும் இந்நிகழ்வின் போது 150க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைகளை மாநகர் மாவட்ட தலைவர் முத்துப்பாண்டி அவர்கள் வழங்கினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES