Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா.!
NKBB Technologies

மதுரையில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75வது சுதந்திர தின விழா.!

மதுரை காளவாசல் பாத்திமா நகர் 1வது தெருவில் உள்ள தமிழ் சினிமா நடிகர்கள் சங்க அலுவலகத்தில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மதுரை டூ தேனி வழி ஆண்டிப்பட்டி திரைப்பட புகழ் இயக்குனர் எஸ்.பி.எஸ் குகன் அவர்கள் தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நோட்புக் மற்றும் கல்வி உபகரணங்கள் இனிப்புகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஜிகர்தாண்டா,சுல்தான், பேட்டா புகழ் நடிகர் காளையன், திரைப்பட நடிகரும், தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான வி.பி.ஆர்.செல்வகுமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சங்க பொதுச்செயலாளர் சி.எம் வினோத் முன்னிலையில் தலைவர் வைரம் ஜப்பார், மதுர பாலா, பரமசிவம், பாலா, அட்சயா தேவகி உறுதிமொழி ஏற்று லஞ்சத்தை ஒழித்திடுவோம், நெஞ்சம் நிமிர்த்திடுவோம், மதுவை ஒழித்திடுவோம்,நம் மனதை மாத்திடுவோம், ஜாதி மதத்தை மறந்துவிடுவோம், சந்தோசமாய் இருந்திடுவோம், நம்மால் இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கே வாழ்க நம் மக்கள், வளர்க நம் தேசம் என உறுதி மொழி ஏற்றனர்.

இதில் துணை நடிகர்,நடிகைகள் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES