Wednesday , September 18 2024
Breaking News
Home / விளையாட்டு

விளையாட்டு

சென்னையில் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடைபெற இருப்பதையொட்டி செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்!

சென்னை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான ‘சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்’ 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் 2200 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தெற்கிலிருந்து வரும் வாகனங்கள் …

Read More »

தோல்விக்கு காரணம் இதுதான்: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்!

ஹைதராபாத்தில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, சென்னை முதலில் பேட் செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 18.1 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அபிஷேக் சர்மா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். சிஎஸ்கே …

Read More »

IPL 2024 : தோல்வி உறுதினு தெரிந்தே தோனி களத்திற்கு வந்தார்.. ஏன் தெரியுமா? ராயுடு சொன்ன சீக்ரெட்!

விசாகப்பட்டினம் : டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் தோல்வி உறுதி என்றே தெரிந்தே தான் தோனி களமிறங்கியதாக முன்னாள் வீரர் அம்பாதி ராயுடு தெரிவித்துள்ளார். 17வது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி முதல் தோல்வியை டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ரிஷப் பண்ட் மற்றும் டேவிட் வார்னரின் அதிரடியால் 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் …

Read More »

 `அந்த பையனுக்கு பயமில்ல…’ – ஹர்ஷித் ராணா வீசிய கடைசி ஓவரின் சுவாரஸ்யங்கள்!

கொல்கத்தா மற்றும் ஹைதரபாத் அணிகளுக்கிடையேயான போட்டி திரில்லாக நடந்திருந்தது. கொல்கத்தா அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. கொல்கத்தா சார்பில் டெத் ஓவரில் 24.5 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்டார்க்கே மரண அடி வாங்க, 22 வயது இளம் வீரரான ஹர்ஷித் ராணா கடைசி ஓவரில் 13 ரன்களை டிஃபண்ட் செய்திருக்கிறார். அந்த கடைசி ஓவர் எப்படி ஹர்ஷித்துக்குக் கிடைத்தது என்பதே ஒரு சுவாரஸ்ய கதைதான்.Harshith ஹென்றிச் க்ளாசென் கொல்கத்தா அணியின் …

Read More »

6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி..!

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் சென்னையில் உள்ள உலக புகழ் பெற்ற சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளான இன்று நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பல பரீட்சை நடத்தியது. இந்த போட்டியில் சென்னை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. …

Read More »

IPl 2024: “நான் இவ்வளவு நாள் ஒய்வில் இருந்தது ஐபிஎல்-காக அல்ல!” – ஓய்வு குறித்து ஹர்திக்

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா ஓய்வு குறித்தும், உலகக்கோப்பை குறித்தும் சில சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார். ஹர்திக் ஏற்கெனவே மும்பை அணியில்தான் ஆடி வந்தார். இடையில் குஜராத் அணியால் வாங்கப்பட்டு கேப்டனாக்கப்பட்டார். முதல் சீசனிலேயே ஹர்திக் அந்த அணியைச் சாம்பியனாக்கியிருந்தார். இரண்டாவது சீசனில் ரன்னர் அப். இந்நிலையில், வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ஹர்திக்கை மும்பை அணி ட்ரேடிங் முறையில் வாங்கியது. ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு …

Read More »

பெங்களூருவில் ஐபிஎல் போட்டிகள் நடக்காதா?… கர்நாடக கிரிக்கெட் சங்கம் கொடுத்த பதில்!

ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. முதல் போட்டியே சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ஐபிஎல் அணிகளில் அதிக ரசிகர்கள் உள்ள அணிகளில் ஒன்றாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. இத்தனைக்கும் இந்த அணி இன்னும் ஒருமுறை கூட …

Read More »

‘சாதிக்க’ காத்திருக்கும் கோலி… ஆர்சிபி அணி எப்படி? – ஐபிஎல் 2024 சிறப்புப் பார்வை

வழக்கம் போல் இம்முறையும் நட்சத்திர பேட்ஸ்மேன்களை அதிகம் உள்ளடக்கிய அணியாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி களமிறங்குகிறது. ஐபிஎல் வரலாற்றில் மிகவும் துடிப்பாக செயல்படக்கூடிய 4 அணிகளில் ஒன்றாக திகழும் ஆர்சிபி அணியானது 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் கோப்பையை கைகளில் ஏந்தியது இல்லை. ஒவ்வொரு முறையும் ஆர்சிபி அணியின் வாசகம் ‘இம்முறை கோப்பை நமதே’ என்பதுதான். இம்முறையும் இதற்கு விதிவிலக்கு இல்லாமல் டு பிளெஸ்ஸிஸ் …

Read More »

நான் 6 பந்தில் 6 சிக்ஸ் அடித்த அந்த பேட்டை வாங்கி தொட்டு பார்த்து கில்க்ரிஸ்ட் என்னிடம் கேட்ட கேள்விகள் இவைதான் – யுவ்ராஜ் நெகிழ்ச்சி

2007-ம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தொடரின் போது இங்கிலாந்து அணிக்கெதிராக ருத்ரதாண்டவம் ஆடிய யுவராஜ் சிங்கை தற்போது வரை நம் யாராலும் மறக்க முடியாது. அந்த உலகக் கோப்பைத் தொடரில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரு ஓவரில் 6 சிக்சர்கள் பறக்க விட்டார் இவர். கேரி சோபர்ஸ், ரவிசாஸ்திரி, ஹெர்செல் கிப்ஸ்ஆகியோருக்கு அடுத்தபடியாக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் விளாசி வீரர் யுவராஜ் சிங் தான். அதுவும் …

Read More »

டி20 தொடரை வென்று வரலாறு படைத்தது இந்திய அணி: நியூஸி.யை 5-0 ‘வொயிட்வாஷ்’ செய்தது…

பும்ரா, ஷைனி, தாக்கூரின் அபாரமான பந்துவீச்சு, ரோஹித் சர்மாவின் அதிரடி ஆட்டம் ஆகியவற்றால் மவுன்ட் மவுங்கனியில் நடந்த 5-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் நியூஸிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தொடரை வென்றது இந்திய அணி. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து அணி …

Read More »
இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES