Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!
NKBB Technologies

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பாஜக விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 72-வது பிறந்த நாளை முன்னிட்டு, மத்திய சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, கிழக்கு மண்டல் 117 வது வட்டத்தில் (தாமஸ் சாலை) உள்ள 5 அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளுக்கு பாஜக விவசாய அணி மாநில துணைத் தலைவரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான வளசை முத்துராமன் ஜி தலைமையில், மாவட்ட தலைவர் ராஜா அன்பழகன் ஏற்பாட்டில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தமிழ் எழுத்து பயிற்சி புத்தகம், எழுது பொருட்கள் மற்றும் சத்து உணவுகள் ஆப்பிள்,ஆவின் பால் பன்,பிரட் மற்றும் காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் வழங்கப்பட்டது.

மேலும் ஏழை தாய்மார்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் விவசாய அணி நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட ,மண்டல், கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES