Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை கே.புதூர் காந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ ரணகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா.!!
NKBB Technologies

மதுரை கே.புதூர் காந்திபுரம் அருள்மிகு ஸ்ரீ ரணகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேக விழா.!!

மதுரை கே.புதூர் காந்திபுரம் பாண்டியன் நகரில் அருள்மிகு ஸ்ரீ ரணகாளியம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் திமுக வடக்கு மாவட்ட மாணவரணி செயலாளரும், சி.ஆர்.பொறியியல் கல்லூரியின் சேர்மனுமாகிய சி.ஆர்.சின்னத்துரை மற்றும் தேமுதிக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட முன்னாள் கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவிற்கு 12-வது வார்டு திமுக வட்டக் கழக செயலாளர் பி.எம்.மருது, வழக்கறிஞர் கார்த்தி, வண்ண மீன் பண்ணை உரிமையாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மேயர் இந்திராணி பொன்வசந்த் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் புவனேஸ்வரி சரவணன்,12-வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதா சந்திரன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியாளர்கள் கௌரவ தலைவர்கள் ராசு, மலைச்சாமி, தலைவர் செல்வம், செயலாளர் சபரி பாண்டியன், பொருளாளர் செல்லப்பாண்டி, துணைத் தலைவர் முருகன், துணைச் செயலாளர் வீரபுத்திரன், மற்றும் நிர்வாகிகள் சேகர், முத்துப்பாண்டி, ஸ்ரீராம், முத்து, குரு சிறப்பாக செய்திருந்தனர்.
Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES