சர்ச்சைகளின் தலைமையிடமான சிம்புவுக்கு ‘மாநாடு’பட டிராப்புக்குப் பிறகு சோதனைகள் அதிகம் நிகழ ஆரம்பித்தன. அவரால் பாதிக்கப்பட்ட ‘ஏ ஏ ஏ’படத்தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் துவங்கி அனைத்து பாதிக்கப்பட்டவர்களும்…ஒன்று சேர்ந்தனர். அதை ஒட்டி பிரச்சினைகளை ஆறப்போட தம்பி சிம்பு இரு மாதங்கள் தாய்லாந்து போய் ஜாய்லாந்து செய்துவிட்டுத் திரும்பினார்.
சொந்த மன உளைச்சல் காரணமாக மேலும் மேலும் குழப்பங்களை ஏற்படுத்திவரும் நிலையில் தன் கைவசம் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு என்று வைத்திருந்த ஒரே படத்தையும் பறிகொடுத்துள்ளார் நடிகர் சிம்பு. இதன் மூலம் ‘தலிவா இனி திரைப்படம் வேண்டாம்.உன் புகைப்படம் மட்டுமே போதும்’என்ற அவரது ரசிகர் ஒருவரின் கூவல் உண்மையாகியிருக்கிறது.