Sunday , February 1 2026
Breaking News
Home / Politics / இந்தியா கூட்டணியின் வெற்றி அவசியம்: கார்கே
NKBB Technologies

இந்தியா கூட்டணியின் வெற்றி அவசியம்: கார்கே

கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது தேர்தலுக்கு முன்பான கண்துடைப்பு நாடகம் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், பாஜக ஆட்சியில்தான் எரிபொருள் விலை உச்சத்தை தொட்டது. சிலிண்டரின் விலை இருமடங்கானது.

தன்னாட்சி நிறுவனங்களை அழித்துவரும் மோடி அரசு I.N.D.I.A. கூட்டணியை பார்த்து பயந்துள்ளது. இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டியது அவசியம் என கூறினார்.

“I.N.D.I.A” கூட்டணிக்கு எதிராக விசாரணை ஏஜென்சிகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்தும் என்று மும்பையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

இதனால், வரும் மாதங்களில் மேலும் பல சோதனைகள் வரும், கைதுக்கு தயாராக இருக்க வேண்டும். இந்தியா ஒரு போருக்குத் தயாராகிறது, அந்தப் போரில் நாங்கள் இந்தியாவிற்காக நிற்கிறோம். மேலும், ஒற்றுமையாக இருந்தால் இந்தியாவை காப்பாற்றிவிடலாம் என்றார்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES