Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன், டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பாக சிறப்பு இருதய மருத்துவ முகாம்.!
NKBB Technologies

மதுரையில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன், டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பாக சிறப்பு இருதய மருத்துவ முகாம்.!

உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை கே.கே நகர் சுந்தரம் பூங்காவில் ஆக்டிவ் ஹார்ட் பவுண்டேஷன் மற்றும் டாக்டர் மாதவன் ஹார்ட் சென்டர் சார்பாக சிறப்பு இருதய மருத்துவ முகாம் நடைபெற்றது.


இருதய சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் மாதவன் முன்னிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் முகாமை தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக இருதய நிபுணர்கள் டாக்டர் அண்ணாமலைசாமி மற்றும் டாக்டர் முத்துச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்த இலவச இருதய பரிசோதனை முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். மேலும் மாரடைப்பு ஏற்பட்டால் உடனடியாக முதலுதவி சிகிச்சை சி.பி.ஆர் பயிற்சி குறித்தும் செய்து காட்டினர்.

ஆரோக்கிய இருதயத்திற்கான குறிப்புகளும் தரப்பட்டது. முன்னதாக இருதய நோய் பற்றிய விழிப்புணர்வு பேரணியில் 150 மாணவர்கள் ஸ்கேட்டிங் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியின் முடிவில் டாக்டர் சனத்குமார் நன்றி கூறினார்.

இளைஞர் குரல் செய்திகளுக்காக மதுரை செய்தியாளர் கனகராஜ்

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES