Thursday , March 19 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரை எல்லீஸ் நகர் அருகே போடி லைன் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்
NKBB Technologies

மதுரை எல்லீஸ் நகர் அருகே போடி லைன் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்

மதுரை எல்லீஸ் நகர் அருகே உள்ள போடி லைன் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோவில், ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பண்ணசாமி, ஸ்ரீ பாண்டி முனீஸ்வரர் திருக்கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

13/12/2023 புதன்கிழமை அன்று கணபதி பூஜை, நவக்கிரக ஹோமம், லட்சுமி குபேர ஹோமம், தன்வந்திரி ஹோமம் நடைபெற்றது.

பின்னர் மறுநாள் வியாழக்கிழமை காலை 10:30 மணிக்கு மேல் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் பக்தர்களுக்கு மாபெரும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர்.

கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES