Tuesday , February 3 2026
Breaking News
Home / செய்திகள் / ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக முதியோர் இல்லம் துவக்கப்பட்டது
NKBB Technologies

ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக முதியோர் இல்லம் துவக்கப்பட்டது

மதுரை,பிப்.22

மதுரை மாவட்டம் ஹார்விபட்டியில் கல்கி பவுண்டேஷன் ட்ரஸ்ட் சார்பாக ஆதரவற்ற பெரியோர்களை பாதுகாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் கல்கி முதியோர் இல்லம் துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி தலைமை வகித்தார்.

இவ்விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தொழிலதிபர் எம்.எம்.கணேசன் சேவையை தொடங்கி வைத்தார்.பின்னர் ஏழை,எளிய முதியோர்களுக்கு அன்னதானத்தை அவர் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

மேலும் இதுகுறித்து டிரஸ்ட் நிறுவனர் அங்குலட்சுமி கூறுகையில் :-

ஹார்விப்பட்டியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கல்கி பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக ஏழை எளிய முதியோர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகிறேன்.

மேலும் எனது நீண்ட நாள் கனவு முதியோர் இல்லம் தொடங்கி ஆதரவற்ற முதியோர்களை பராமரிப்பது என்பதே எனது லட்சியமாக இருந்தது

அந்தக் கனவு இப்போது நிறைவேறி உள்ளது. மதுரை முழுவதும் உள்ள ஆதரவற்ற முதியோர்களை எனது இல்லத்தில் சேர்த்து அவர்களை பாசத்துடனும் பரிவுடன் கவனிக்க வேண்டும் என்பதே எனது ஆசை. என கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES