Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மனிதநேய மக்கள் கட்சி 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக நலத்திட்ட உதவிகள்
NKBB Technologies

மனிதநேய மக்கள் கட்சி 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மதுரை தெற்கு மாவட்டம் சார்பாக நலத்திட்ட உதவிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழா

மதுரை,பிப்.25-

மனிதநேய மக்கள் கட்சியின் 16 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, மதுரை தெற்கு மாவட்டம் 77-வது வார்டு சுப்ரமணியபுரம் கிளை சார்பாக கட்சி கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் ஆதரவற்றோர் இல்லத்தில் உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.மேலும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமுமுக மாநில நிர்வாக குழு உறுப்பினர் கே.முஹம்மது கவுஸ், மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்பு செயலாளர் காதர்மைதீன், மனிதநேய மக்கள் கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் ஷேக்இப்ராஹிம், மாவட்ட செயலாளர் ஆம்புலன்ஸ் ஷேக், ம.ம.க மாவட்ட செயலாளர் முபாரக் நிஜாமுதீன் மமக மாவட்ட பொருளாளர் அப்துல் ஹமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை 77 வது வார்டு சுப்ரமணியபுரம் கிளை மனிதநேய மக்கள் கட்சி செயலாளர் ஜாகிர்உசேன், பரக்கத்அலி, இஸ்மாயில் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES