Friday , March 20 2026
Breaking News
Home / செய்திகள் / மதுரையில் கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு இலவச அக்குபஞ்சர் சிகிச்சை..!
NKBB Technologies

மதுரையில் கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு இலவச அக்குபஞ்சர் சிகிச்சை..!

மதுரை திருப்பாலை கிருஷ்ணன் கோவில் எதிரே உள்ள கேசவ கேந்திரா சேவா மையம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து, பொதுமக்களுக்கு அக்குபஞ்சர் சிகிச்சை இலவசமாக வழங்கப்பட்டது.
டாக்டர் என்.மாரி சிகிச்சை அளித்தார்.

இதில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இது குறித்து டாக்டர் என் மாரி கூறுகையில்,
கேசவ சேவா கேந்திரம் மற்றும் நடராஜன் நினைவு கல்வி அறக்கட்டளை இணைந்து இந்த அக்குபஞ்சர் முகாம் நடந்து வருகிறது. பொதுமக்களுக்கு சேவை செய்யும் விதமாக முற்றிலும் இலவசமாக சேவை செய்து வருகிறோம்..

கடந்த நான்கு மாதங்களாக நடந்து வரும் இந்த முகாமில் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்து வருகின்றனர். மேலும் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, சர்க்கரை நோய் போன்ற பல்வேறு நோய்களுக்கு இந்த அக்குபஞ்சர் சிகிச்சை அளித்து வருகிறோம். இந்த இந்த முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்த பொதுமக்கள் எங்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இது எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை கோ.புதூர் அல்-அமீன் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை பிப் 06 மதுரை …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES