Thursday , January 29 2026
Breaking News
Home / Politics / முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை
NKBB Technologies

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை

May be an image of 9 people and temple

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா திரு.ராஜிவ்காந்தி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (20.08.2024) தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஏற்பாட்டில் சைதாப்பேட்டை சின்னமலையில் அமைந்துள்ள ராஜிவ்காந்தி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செய்தோம். பின்பு சமூக நல்லிணக்கநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டோம். அங்கிருக்கும் கொடிக்கம்பத்தில் காங்கிரஸ் பேரியக்கத்தின் கொடியேற்றினோம்.

நிகழ்வில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் திரு.கே.வீ.தங்கபாலு அவர்கள், திரு.சு.திருநாவுக்கரசர் அவர்கள், தமிழ்நாடு சட்டமன்ற பேரவை காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.ராஜேஷ்குமார் அவர்கள், துணைத்தலைவர் திரு.சொர்ணா சேதுராமன் அவர்கள், அமைப்புச் செயலாளர் திரு.ராம்மோகன் அவர்கள், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பின் திரு.விஜய்வசந்த் அவர்கள் மற்றும் தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் அவர்கள் மற்றும் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

Bala Trust

About Admin

Check Also

கரூர் காங்கிரஸ் புதிய மாவட்டத் தலைவர்…

கரூர் மாவட்டத்திற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கரூர் மாவட்ட தலைவர் திரு ரமேஷ் அவர்களின் பணி சிறக்க கரூர் மாவட்ட தகவல் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES