Thursday , January 29 2026
Breaking News
Home / செய்திகள் / திண்டுக்கல்லில் சுதந்திர தின பவள விழா நடைபயண குழுவினரை வரவேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர்
NKBB Technologies

திண்டுக்கல்லில் சுதந்திர தின பவள விழா நடைபயண குழுவினரை வரவேற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியினர்

திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றுவரும் சுதந்திர தின பவள விழா நடைபயணகுழு மாவட்ட தலைவர் அப்துல்கனி தலைமையில் 9.8.22 தேதி நத்தம் தொகுதியில் துவங்கி இன்று வெள்ளிக்கிழமை காலை வத்தலக்குண்டு வந்தடைந்தது.

மதுரை ரோடு நிலக்கோட்டை வத்தலக்குண்டு எல்லையில் வட்டார தலைவர் காமாட்சி, மூத்த காங்கிரஸ் தலைவர் ராஜாராம், நகர தலைவர்.அப்துல் அஜீஸ் வரவேற்று பேசினார்.

மேலும் புதிதாக காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மாவட்ட தலைவர் பொன்னாடை போர்த்தி பதவி சான்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கோபால், மாவட்ட பொறியாளர் பிரவு தலைவர் சித்திக், மாவட்ட துணை தலைவர் லட்சுமணமூர்த்தி, மகிளா காங்கிரஸ் மாநில செயலாளர் திருமதி ஸ்டெல்லா, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சாகுல் ஹமீது, வட்டார அவைத் தலைவர்.ராஜா, வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் லாரன்ஸ்,சேவுகம்பட்டி பேரூராட்சி தலைவர் நாகராஜ்.பட்டிவீரன்பட்டி நகர தலைவர் பிரசன்னா, வட்டார பொது செயலாளர் பாஸ்கரன், வட்டார பிரச்சார குழு தலைவர் பாலகிருஷ்ணன்,வட்டார துணை தலைவர்கள் பழனிச்சாமி, கணேசன், அன்புசிவம், வட்டார செயலாளர்கள், திருப்பதி, நாகேந்திரன், நகர செயலாளர் ராமு, ரஞ்சித், ராஜேஷ்,நகர பொருளாளர், முகம்மது ரபீக், வட்டார மருத்துவர் அணி தலைவர் காந்தி,நகர சிறுபான்மை பிரிவு தலைவர் இஸ்மாயில். பிரபு கிருஷ்ணன், கணேசன், செந்தில் குமார், கோபாலன், கிராம் கமிட்டி தலைவர்கள், வார்டு கமிட்டி தலைவர்கள், பேரியக்க தொண்டர்கள், திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் அமைப்பு சாரா தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் அஜீஸ் நன்றி கூறினார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

பள்ளபட்டியில், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி அவர்கள் திறந்து வைத்து மாணவர்கள் முன்னிலையில் உரை

பள்ளப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பாராளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து திறன் வகுப்பறையை கரூர் பாராளுமன்ற உறுப்பினர் திருமிகு ஜோதிமணி …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES