Thursday , November 14 2024
Breaking News
Home / செய்திகள் / சோழன் உலக சாதனை படைத்த சர்வதேச எம்.எம்.ஏ. வீரருக்கு தமிழக முதல்வர் பாராட்டு.!
MyHoster

சோழன் உலக சாதனை படைத்த சர்வதேச எம்.எம்.ஏ. வீரருக்கு தமிழக முதல்வர் பாராட்டு.!

தற்காப்புக் கலையின் ஜாம்பவானும் நிபுணரும் திரைப்பட நடிகருமான மறைந்த புரூஸ்லீ அவர்களின் உலக சாதனையான ஒரு நொடியில் ஒன்பது குத்துக்கள் என்ற உலக சாதனையை ஒரு நொடியில் 13 குத்துக்கள் செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்த சர்வதேச எம்.எம்.ஏ. குத்துச்சண்டை வீரர் பாலி சதீஸ்வர் மீண்டும் ஒரு நொடியில் 16 குத்துக்கள் செய்து தன்னுடைய உலக சாதனையை தானே முறியடித்த மீண்டும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்தார்.

மேலும், இவர் தமிழகம் சார்பாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற உலகில் மிகவும் ஆபத்தான எம்.எம்.ஏ. சண்டைகள் அனைத்திலும் முதல் சுற்றிலேயே தன்னுடைய எதிரியை வீழ்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.

மேலும், பல சர்வதேச கிக் பாக்சிங் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 12-08- 2022 அன்று மாண்புமிகு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இவரைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

Bala Trust

About Kanagaraj Madurai

Check Also

மதுரையில் ஏழை, எளிய மக்களுக்கு 250-வது நாளாக உணவளித்து வரும் நட்சத்திர நண்பர்கள் அறக்கட்டளை..

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்கும், அவர்களுடன் உடன் இருப்பவர்களுக்கும் தொடர்ந்து இடைவிடாமல் 250-வது நாளாக உணவு …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES