தற்காப்புக் கலையின் ஜாம்பவானும் நிபுணரும் திரைப்பட நடிகருமான மறைந்த புரூஸ்லீ அவர்களின் உலக சாதனையான ஒரு நொடியில் ஒன்பது குத்துக்கள் என்ற உலக சாதனையை ஒரு நொடியில் 13 குத்துக்கள் செய்து சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்த சர்வதேச எம்.எம்.ஏ. குத்துச்சண்டை வீரர் பாலி சதீஸ்வர் மீண்டும் ஒரு நொடியில் 16 குத்துக்கள் செய்து தன்னுடைய உலக சாதனையை தானே முறியடித்த மீண்டும் சோழன் உலக சாதனை புத்தகத்தில் தன்னுடைய பெயரை பதிய வைத்தார்.
மேலும், இவர் தமிழகம் சார்பாக பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற உலகில் மிகவும் ஆபத்தான எம்.எம்.ஏ. சண்டைகள் அனைத்திலும் முதல் சுற்றிலேயே தன்னுடைய எதிரியை வீழ்த்தி தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர்.
மேலும், பல சர்வதேச கிக் பாக்சிங் போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெற்றுள்ளார். கடந்த 12-08- 2022 அன்று மாண்புமிகு
தமிழக முதல்வர் இவரைப் பாராட்டி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.