தேமுதிக நிறுவனத்தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆணைக்கிணங்க, கழக பொருளாளர் பிரேமலதா அவர்களின் ஆலோசனைப்படி, மாநில கழக துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல் மண்டல பொறுப்பாளருமான ப.பார்த்தசாரதி அவர்கள் மற்றும் மாநில பொறியாளர் அணி துணை செயலாளரும், கழக அமைப்பு தேர்தல் மாவட்ட பொறுப்பாளருமான கே.கே.கிருஷ்ணன் மற்றும் மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் வி.பி.ஆர்.செல்வகுமார் ஆகியோர் மதுரை மாநகர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட 5-பகுதி கழகங்கள், 39-வட்ட கழகங்களின் நிர்வாகிகளிடம் நேரடி கள ஆய்வு, டி.ஆர்.ஓ.காலனியில் உள்ள மாநகர் வடக்கு மாவட்ட தலைமை அலுவலகத்திலும், அந்தந்த பகுதிகளுக்கும் நேரடியாக சென்று மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் தெற்கு தொகுதி பொறுப்பாளர் மனோகரன், துணைச்செயலாளர் காலாங்கரை ராமு, இளமி நாச்சியார், செயற்குழு உறுப்பினர் சின்னச்சாமி, பகுதி செயலாளர்கள் மேலமடை ஐயப்பன், கோவிந்தராஜ், இளங்கோ, கோல்டு முருகன், மற்றும் மாணவரணி செயலாளர் காளீஸ்வரன், துணைச் செயலாளர் மணிகண்டன், பிரபு, நெசவாளர் அணி பிரகாஷ், வர்த்தகர் அணி ஜெயபாண்டி, தொழிற்சங்கம் புலிவீரன் உள்பட வட்டக்கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட செயலாளர் கனகராஜ்