வரலாற்றில் இன்று
01-10-2019
நிகழ்வுகள்
இன்று
- ?கிமு 331– பேரரசர் அலெக்சாந்தர் பாரசீகத்தின் மூன்றாம் டாரியசு மன்னனை குவாகமேலா சமரில் வென்றான்.
- ?366– முதலாம் தாமசுஸ் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ?959 – முதலாம் எட்கார் இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
- ?965 – பதின்மூன்றாம் ஜான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- ?1553 – இங்கிலாந்தின் முதலாம் மேரியின் முடிசூடல் நிகழ்வு இடம்பெற்றது.
- ?1730 – உதுமானிய சுல்தான் மூன்றாம் அகமது முடி துறந்தான்.
- ?1787 – அலெக்சாந்தர் சுவோரொவ் தலைமையில் உருசியப் படைகள் கின்பேர்ன் என்ற இடத்தில் துருக்கியரைத் தோற்கடித்தன.
- ?1795 – ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்ற இசுப்பிரிமொண்ட் சமரை அடுத்து, பிரான்சு தெற்கு நெதர்லாந்தை அதிகாரபூர்வமாகக் கைப்பற்றியது.
- ?1799 – கட்டபொம்மனை புதுக்கோட்டை மன்னர் விஜயரகுநாத தொண்டமான் கைது செய்தார்.
- ?1800 – எசுப்பானியா லூசியானாவை பிரான்சிடம் தந்தது. முப்பது மாதங்களின் பின்னர் ஐக்கிய அமெரிக்கா அதனை பிரான்சிடம் இருந்து வாங்கியது.
- ?1814 – நெப்போலியனின் தோல்வியை அடுத்து ஐரோப்பாவின் புதிய அரசியல் வரைபடத்தை வரைவதற்காக வியன்னா மாநாடு கூடியது.
- ?1827 – உருசிய-பாரசீகப் போர்: உருசிய இராணுவம் யெரெவானைக் கைப்பற்றியது. ஆர்மீனியாவில் முசுலிம்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
- ?1833 – இலங்கையில் சட்டவாக்கப் பேரவை, மற்றும் நிறைவேற்றுப் பேரவை ஆகியன ஆரம்பிக்கப்பட்டன.[1]
- ?1843 – நியூசு ஆப் த வேர்ல்ட் பத்திரிகை லண்டனில் வெளியிட ஆரம்பிக்கப்பட்டது.
- ?1854 – இந்திய அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
- ?1880 – இந்தியாவுடனான காசுக்கட்டளை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
- ?1887 – பிரித்தானியா பலூசிஸ்தானைக் கைப்பற்றியது.
- ?1892 – இலங்கையில் இந்திய இரண்டு அணா நாணயம் செல்லுபடியற்றதாக்கப்பட்டு, வெள்ளி நாணயம் அறிமுகமானது.[2]
- ?1898 – உருசியாவின் முக்கிய நகரங்களிலிருந்து யூதர்கள் இரண்டாம் நிக்கலாஸ் மன்னனால் வெளியேற்றப்பட்டனர்.
- ?1910 – லாஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ் கட்டடம் பெரும் குண்டுவெடிப்பினால் தகர்க்கப்பட்டதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.
- ?1918 – முதலாம் உலகப் போர்: அரபுப் படைகள் சிரியாவின் டமாஸ்கசு நகரைக் கைப்பற்றினர்.
- ?1936 – பிரான்சிஸ்கோ பிராங்கோ எசுப்பானியாவின் தேசிய அரசின் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
- ?1939 – இரண்டாம் உலகப் போர்: ஒரு மாத கால முற்றுகையின் பின்னர் செருமனியப் படைகள் வார்சாவா நகரைக் கைப்பற்றின.
- ?1942 – இரண்டாம் உலகப் போர்:: அமெரிக்காவின் குரூபர் கப்பல் ஆங்காங்கில் இருந்து பிரித்தானியப் போர்க் கைதிகளை ஏற்றி வந்த லிசுபன் மாரு என்ற கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது.
- ?1943 – நாபொலியின் நான்கு நாட்கள்: நேச நாடுகளின் படைகள் நாபொலி நகரைக் கைப்பற்றின.
- ?1946 – நாட்சித் தலைவர்களுக்கு நியூரம்பெர்க் தீர்ப்பாயத்தில் தண்டனைகள் வழங்கப்பட்டன.
- ?1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு அறிவிக்கப்பட்டது.
- ?1953 – சென்னை மாநிலத்தில் இருந்து தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட ஆந்திரப் பிரதேசம் தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
- ?1960 – நைஜீரியா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- ?1961 – கிழக்கு மற்றும் மேற்கு கமரூன் ஒன்றுபட்டு கமரூன் சமஷ்டிக் குடியரசு ஆகியது.
- ?1964 – சப்பானிய சின்கான்சென் அதி-வேகத் தொடருந்து சேவை டோக்கியோவில் இருந்து ஒசாக்கா வரை ஆரம்பிக்கப்பட்டது.
- ?1966 – அமெரிக்காவின் ஓரிகன் மாநிலத்தில் விமானம் ஒன்று வீழ்ந்து நொருங்கியதில் 18 பேர் உயிரிழந்தனர்.
- ?1969 – கான்கோர்டு விமானம் முதற்தடவையாக ஒலியின் வேகத்தைத் தாண்டிப் பறந்தது.
- ?1971 – வால்ட் டிஸ்னி உலகம் புளோரிடாவில் ஆரம்பமானது.
- ?1975 – சீசெல்சு சுயாட்சி பெற்றது. எலீஸ் தீவுகள் கில்பேர்ட் தீவுகளிலிருந்து பிரிக்கப்பட்டு துவாலு என்ற பெயரைப் பெற்றது.
- ?1977 – பிரேசில் கால்பந்தாட்ட வீரர் பெலே இளைப்பாறினார்.
- ?1978 – துவாலு ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
- ?1979 – ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயை பனாமாவுக்கு மீள் அளித்தது.
- ?1982 – சோனி நிறுவனம் முதலாவது குறுந்தகடு ஒலிபரப்பியை (சிடிபி-101) வெளியிட்டது.
- ?1985 – மரக்கால் நடவடிக்கை: இசுரேல் தூனிசியாவில் உள்ள பாலத்தீன விடுதலை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தைத் தாக்கியது.
- ?1989 – தற்பால்சேர்க்கைத் திருமணத்தை உலகில் முதன் முதலாக டென்மார்க் சட்டபூர்வமாக்கியது.
- ?1992 – விடுதலைப் புலிகள் கட்டைக்காடு இராணுவக் காவலரணைத் தாக்கி பெருந்தொகையான ஆயுதங்களைக் கைப்பற்றினர்.
- ?1994 – பலாவு ஐநாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- ?2001 – ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவையைத் தகர்க்க தற்கொலைப் படையினர் நடத்திய கார் வெடிகுண்டு தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- ?2005 – பாலியில் நடந்த குண்டுவெடிப்பில் 4 ஆத்திரேலியர் உட்பட 23 பேர் கொல்லப்பட்டனர்.
- ?2006 – பாண்டிச்சேரி மாநிலத்தின் பெயர் புதுச்சேரி என மாற்றப்பட்டது.
- ?2012 – ஆங்காங்கில் பயணிகள் கப்பல் ஒன்று கவிழ்ந்ததில் 38 பேர் உயிரிழந்தனர், 102 பேர் காயமடைந்தனர்.
- ?2015 – குவாத்தமாலாவில் மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக 280 பேர் உயிரிழந்தனர்.
- ?2017 – காத்தலோனியாவில் இடம்பெற்ற விடுதலைக்கான பொது வாக்கெடுப்பு சட்டவிரோதமானது என எசுப்பானிய நீதிமன்றம் அறிவித்தது.
- ?2017 – ஐக்கிய அமெரிக்காவின் லாஸ் வேகஸ் மாநிலத்தில் இசை விழா ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டு, 851 பேர் காயமடைந்தனர்.
பிறப்புகள்
- ?1847 – அன்னி பெசண்ட், ஆங்கிலேய-இந்திய செயற்பாட்டாளர் (இ. 1933)
- ?1896 – லியாகத் அலி கான், பாக்கித்தானின் 1வது பிரதமர் (இ. 1951)
- ?1904 – ஏ. கே. கோபாலன், இந்தியக் கல்வியாளர், அரசியல்வாதி (இ. 1977)
- ?1906 – எஸ். டி. பர்மன், இந்தித் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர் (இ. 1975)
- ?1912 – கத்லீன் ஒல்லரென்ழ்சா, ஆங்கிலேய கணிதவியலாளர், வானியலாளர், அரசியல்வாதி (இ. 2014)
- ?1918 – ஜி. வெங்கடசாமி, இந்தியத் தொழிலதிபர், கண் மருத்துவர் (இ. 2006)
- ?1924 – ஜிம்மி கார்ட்டர், அமெரிக்காவின் 39வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
- ?1927 – சிவாஜி கணேசன், தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2001)
- ?1928 – சூ சுங்ச்சி, சீனாவின் 5வது பிரதமர்
- ?1932 – அரங்க முருகையன், தமிழறிஞர், எழுத்தாளர் (இ 2009)
- ?1936 – கே. எஸ். சிவகுமாரன், ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர்
- ?1941 – சி. க. சிற்றம்பலம், ஈழத்து வரலாற்றாய்வாளர், கல்வியாளர், எழுத்தாளர்
- ?1941 – செ. யோகநாதன், ஈழத்து எழுத்தாளர் (இ. 2008)
- ?1956 – தெரசா மே, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்
- ?1958 – ஆந்தரே கெய்ம், உருசிய-டச்சு இயற்பியலாளர்
- ?1998 – பாலச்சந்திரன், இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட சிறுவன், விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கடைசி மகன் (இ. 2009)
இறப்புகள்
- ?1404 – ஒன்பதாம் போனிஃபாஸ் (திருத்தந்தை) (பி. 1356)
- ?1973 – பாபநாசம் சிவன், கருநாடக, தமிழிசை அறிஞர் (பி. 1890)
- ?2008 – பூர்ணம் விஸ்வநாதன், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (பி. 1921)
- ?2010 – அவுதவின் தோல்பசு, பிரான்சிய வானியலாளர் (பி. 1924)
- ?2012 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய மார்க்சிய சிந்தனையாளர், வரலாற்றாளர் (பி. 1917)
- ?2013 – டாம் கிளான்சி, அமெரிக்க எழுத்தாளர் (பி. 1947)
- ?2014 – ராபர்ட் செரா, வெனிசுவேலாவின் அரசியல்வாதி (பி. 1987)
சிறப்பு தினம்
- ?குழந்தைகள் தினம் (எல் சால்வடோர், குவாத்தமாலா, இலங்கை)
- ?சீன தேசிய தினம்
- ?விடுதலை தினம் (சைப்பிரசு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960); (நைஜீரியா, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1960); (பலாவு, ஐக்கிய நாடுகளிடம் இருந்து, 1994); (துவாலு, ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து, 1978)
- ?அனைத்துலக முதியோர் தினம்
- ?உலக சைவ உணவு தினம்.
➖➖➖➖➖➖➖➖➖➖