ஹிந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, தன்னை விட 10 வயது குறைந்த ஹாலிவுட்டின் பிரபல பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்தார். உடை விஷயத்தில் அந்த ஊர் பெண்ணாகவே இவர் மாறிவிட்டார். விருது விழாக்களில் ஹாலிவுட் நடிகைகள் அணிந்து வரும் கவர்ச்சி உடை போன்று இவரும் பொது விழாக்களுக்கு கவர்ச்சியாகவே வலம் வருகிறார்.
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசைக்கான 62வது கிராமி விருதுகள் விழா நடந்தது. இதில் கணவர் நிக் உடன் பிரியங்கா சோப்ரா பங்கேற்றார். விழாவிற்கு வந்த அனைவரின் பார்வையும் இவர்கள் மீதே இருந்தது. காரணம், பிரியங்கா அணிந்த வந்த ஆடை, மிகவும் கவர்ச்சியாக இருந்தது. இது எந்த ரகம் ஆடை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு கவர்ச்சி உடை. பிரியங்காவின் இந்த கவர்ச்சியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றன.
அதேசமயம், இவர் அணிந்த வந்த உடை லேட்டஸ்ட் பேஷன் கிடையாது. 20 ஆண்டுகளுக்கு முன்பு இதே விழாவில் இதே மாதிரியான ஒரு உடையை நடிகை ஜெனிபர் லோபஸ் அணிந்து வந்துள்ளார். ஜெனிபர் லோபஸ் அளவுக்கு நீங்கள் அழகாக இல்லை. 50 வயதில் ஜெனிபர் லோப்ஸ் இந்த உடை அணிந்தால் கூட அழகாகத்தான் இருப்பார். உங்களுக்கு இது செட்டாகவில்லை என ரசிகர்கள் இரண்டு போட்டோக்களையும் ஒப்பிட்டு பிரியங்காவை நக்கல் செய்து வருகின்றனர்.