ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் 25-வது படமாக உருவாகி வரும் ‘நோ டைம் டூ டை’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்டின் ரகசிய குறிப்பெண் 007. ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு பல ஆங்கிலத் திரைப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்த படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் பல்வேறு சாதனைகள் படைக்கிறது.
ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகி உள்ளன. தற்போது 25-வது படமாக ‘நோ டைம் டூ டை’ தயாராகி வருகிறது. இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் உள்பட மேலும் பலர் நடிக்கும் இந்த படத்தை கேரி ஜோஜி புகுனகா இயக்கியுள்ளார்.
இந்தப் படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி இங்கிலாந்திலும், ஏப்ரல் 8-ம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற நவம்பர் மாதம் 12-ந் தேதி இங்கிலாந்திலும், நவம்பர் 25-ந் தேதி அமெரிக்காவிலும் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.