Sunday , September 8 2024
Breaking News
Home / கோயம்புத்தூர் / நாட்டு ரக மாமரம் – 100 ரூபாய்

நாட்டு ரக மாமரம் – 100 ரூபாய்

தமிழ்நாட்டுல எந்த nursery க்கு போனாலும் ஒட்டு கன்னு, hybrid விதைல உருவாக்கின மரத்தையோ இல்ல திசு வளர்ப்பு மூலமா உருவாக்கின மரத்தையோ தான் தருவாங்க. இந்த மரங்களோட மொத்த வாழ்நாள் 10 இல்ல 15 வருஷம் தான் வரும். மற்றும் நம்ம உடம்புக்கு எந்த விதமான நன்மையும் தராது (வயிறு மட்டும் தாம் நிறையும்).

ஆனா மோகன்ராஜ் ஒருத்தர் தான் அங்க இங்கன்னு அலஞ்சி திரிஞ்சி நாம மறந்து போன நிறைய நாட்டு ரக பழ மரங்களை நேரடியா விதைகள்ள இருந்து மரக்கண்ணா உற்பத்தி செய்யுறாங்க. இப்படி செய்யுறதால ஆணி வேர் பலமா இருக்கறதால இவரோட மரங்களுக்கு ஆயுள் 150 ல இருந்து 200 வருஷம் இருக்கும்னு சொல்றாங்க. இந்த மாதிரியான நாட்டு ரக பழங்களை சாப்டுறதால நம்ம உடம்பு நல்லா எந்த நோயும் நொடியும் இல்லாம ஆரோக்கியமா இருக்கும்.

யாராவது தோப்பு வைக்கணும்னு நெனச்சீங்கன்னா, இது அவரோட தொலைபேசி எண் – 9894875850.

நாட்டு ரக மாமரம் மட்டும் 100 ரூபாய். மத்த எல்லா நாட்டு ரக மரங்களும் 50 ரூபாய் தான். இவர்கிட்ட இப்போ நடவுக்கு தயாரா இருக்குற மரங்கள்…

10 வகை கொய்யா
10 வகை பலா
30 வகை மாம்பழம்
இனிப்பு நாரத்தை
புளிப்பு நாரத்தை
கெடா நாரத்தை
நெல்லி
5 வகை மாதுளை
கொலுமிச்சை
எலுமிச்சை
பூந்திக்காய் (சோப்புக்காய்)
காட்டு சீத்தா
ராம் சீத்தா
முள் சீத்தா
இனிப்பு கொடுக்காய்ப்புளி
அத்தி
பவழமல்லி
ஆரஞ்சு
அசோகமரம்
விளாம்பழம்
அரைநெல்லி
ஈச்ச மரம்

இது போக உங்களுக்கு வேற ஏதாவது ரகம் வேணும்னா, அந்த ரகத்தை அவர்க்கிட்டா சொன்னா மட்டும் போது. அதை தேடி கண்டுபுடிச்சி விதை எடுத்து உங்களுக்கு அதை மரக்கன்றாக உற்பத்தி பண்ணி தருவாங்க.

ஒட்டு கன்னு, Hybrid, திசு வளர்ப்பில் வரும் மரங்களின் ஆயுள் 15 வருடம் மட்டும் தான்… குறிப்பா இயற்கைச் சீற்றங்களை தாங்காதுங்க.

நாட்டு மரங்கள் வளர்த்தால் நாலு ஐந்து தலைமுறைகள் பயனடைவார்கள்….. உங்களது வம்சாவளி மிக மிக ஆரோக்யமாக இருக்கும்ங்க…..

எஸ்.மோகன்ராஜ் – 9894875850.

நன்றி இளையதலைமுறை ஆனந்தகுமார்

Bala Trust

About Admin

Check Also

7-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்… கோவை விமான நிலையத்தில் தீவிர சோதனை

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரம் …

இரத்தம் வேண்டுமா?
NKBB TECHNOLOGIES