டிச.3.
கரூர் மாவட்டம் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த அரசு ‘அடையாள மீட்பு ‘என்னும் தலைப்பில் திரைப்படத்தை தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ளார்.
திரைப்படத்தின் கதை பாடல்கள் இசை ஆகியவற்றின் பொறுப்புகளையும் அவரே ஏற்று உள்ளார்.
இப்படம் கரூர் உள்பட பல ஊர்களில் 15 நாட்களாக ஓடிக்கொண்டிருக்கிறது.
மண்ணின் மைந்தர் என்ற முறையிலும், வளர்ந்து வரும் கலைஞர் என்று ஊர் கூடி வாழ்த்த வேண்டும் என்ற விருப்பத்துடனும் கரூர் லட்சுமி ராம் தியேட்டரில் கதாநாயகன்
அரசுவை வாழ்த்தும் விழா நடந்தது.
கரூர் மீதும் திரைத்துறை மீதும் ஆர்வம் கொண்ட அன்பர்கள் நண்பர்கள் பிரமுகர்கள்
பல்வேறு ரசிகர் மன்றத்தினர் இவ்விழாவில் கலந்துகொண்டு கரூர் மக்கள் சார்பில் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பரிசளித்து பாராட்டினர்.
கரூர் நகர பிரமுகர்கள் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பிரபு, கோபால், சுதாகர்,ஷாஜி, இசக்கிமுத்து, சுரேஷ், சிவராஜ், வையாபுரி ,ரஜினிராஜா, சரத் மகேஸ்வரன், மோகன்ராஜ்,பாலமுருகன் மற்றும் பலர் கலந்து கொண்டு கதாநாயகன் அரசுவையும் இத்திரைப்படத்தில் நடித்த வடிவேல் ராவணன், சங்கர் தாஸ், கடவூர் மருதையன் , நடிகை கங்கா ஒளிப்பதிவாளர் சைன் சங்கர் ஆகியோரையும் வாழ்த்தினர்.
கமலஹாசன் சரத்குமார்,விஜயகாந்த், சிம்பு, கார்த்திக் ஆகியோரின் நற்பணி மன்ற நிர்வாகிகளும் உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவினைச் சிறப்பித்தனர்.
விழா ஏற்பாடுகளை ஹெல்ப் 2 ஹெல்ப் முதன்மை ஒருங்கிணைப்பாளர் சிவராமன்,சதாசிவம் செய்திருந்தனர்.