ஹெல்ப் 2 ஹெல்ப் அமைப்பின் முதல் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் குழுவின் அடுத்த கட்ட நகர்வு பற்றி விவாதிக்கப்பட்டது. கரூரில் Eye Bank துவங்குவதற்காக நமது அமைச்சரை அணுகுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
லாக்டவுன் அறிவிக்கப்பட்டால் சேவைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என்றும் விவாதிக்கப்பட்டது.
விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள்,பிரசாரங்கள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் சங்க கரூர் மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர் அவர்களுக்கும் , மகளிர் அணி செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பாளர் கார்முகில் அவர்களுக்கும் பாராட்டும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
ஆடை தானம் சேவையின் கள ஒருங்கிணைப்பாளராக கனகராஜ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பினை ஒருங்கிணைப்பாளர்கள் பாலமுருகன் அவர்களும் மகேஸ்வரி அவர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
Sanitory Napkin திட்டத்திற்கு நன்கொடை வழங்கிய ஊட்டி கிரீன் ஃபாரஸ்ட் திரு .இசக்கி முத்து அவர்களுக்கும் RDO திரு பாலசுப்ரமணியம் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் திலகவதி,
மகேஸ்வரி,ரவிசங்கர்,பாலமுருகன்,
முகுந்தன், கனகராஜ், குமரன், தங்கவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் முதன்மை ஒருங்கிணைப்பாளர் திரு சிவராமன் அவர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
ஹெல்ப் 2 ஹெல்ப் மென்மேலும் வளர இளைஞர் குரல் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.